Saturday, 18 March 2017
இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி தொகுப்பு எண்:-115
கேள்வி (1)
உலகின் முதல் நபியார்?
இறுதிநபியார்?
பதில் (1)
உலகின் முதல் நபியார்?
ஆதம் நபி(அலை)
(19:58;20:122)
இறுதிநபியார்?
முஹம்மது நபி ஸல் (33:40)
கேள்வி (2)
பொறுமையில் சிறந்த நபி யார்?
பதில் (2)
அய்யூப் நபி(21:83;84)
கேள்வி (3)
அழகில் சிறந்த நபி யார்?
கனவு களுக்கு விளக்கம் கூறிய நபி யார்?
சிறைச்சாலை சென்ற நபி யார்?
பதில் (3)
யூசுப் நபி
Qur'an:(12:31;21)
(12:32;35;42)
கேள்வி (4)
அரசியல் வாழ்வில் தலை சிறந்த நபி யார்?
பதில் (4)
சுலைமான் நபி
Qur'an:38:35
கேள்வி (5)
சிறந்த குரல் வளம் பெற்ற நபி யார்?
பதில் (5)
தாவூத் நபி அலை
Qur'an:34:10
கேள்வி (6)
கவலைகள் அதிகம் கொண்ட நபி யார்?
பதில் (6)
யாகூப் நபி அலை
கேள்வி (7)
இரக்கம் அதிகம் உள்ள நபி யார்?
பதில் (7)
யஹ்யா நபி அலை
Qur'an:19:13
கேள்வி (8)
கோபம் மிக்க நபி யார்?
பதில் (8)
மூஸா நபி அலை
7:150;154
கேள்வி (9)
இந்த நபி தந்தையின்றி பிறந்தார்?
பதில் (9)
ஈசா நபி
Qur'an:3:47-59; 19:17-21
கேள்வி (10)
தள்ளாத வயதிலும் இஸ்மாயில் இஸ்ஹாக் நபியைப் பெற்றார்?
பதில் (10)
இபுராகிம் நபி
Qur'an:14:39
Monday, 6 March 2017
வினா விடை தொகுப்பு
#கேள்வி#1
அல்லாஹ் விற்கு உதாரணம் உள்ளதா?
#பதில்#1
16:74
16:74 فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
16:74. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
#கேள்வி#2
அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்? யார் அவர்கள்?
#பதில்#2
16:75
16:75 ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًاؕ هَلْ يَسْتَوٗنَؕ اَ لْحَمْدُ لِلّٰهِؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ
16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
#கேள்வி#3
மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்:
#பதில்#3
16:76
16:76 وَضَرَبَ اللّٰهُ مَثَلاً رَّجُلَيْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰٮهُۙ اَيْنَمَا يُوَجِّههُّ لَا يَاْتِ بِخَيْرٍؕ هَلْ يَسْتَوِىْ هُوَۙ وَمَنْ يَّاْمُرُ بِالْعَدْلِۙ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?
#கேள்வி#4
காபிர்களுக்கு உதாரணம் என்ன?
#பதில்#4
#கானல்நீர்
24:39
24:39 وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ
24:39. அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
#கேள்வி#5
தமது வசனங்களை அலட்சியம் செய்தவர்கள் எதற்கு உதாரணம்?
#பதில்#5
#கால்நடைகள்
7:179
7:179 وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
#கேள்வி#6
காபிர்களுக்கு மற்றும் ஒரு உதாரணம் என்ன?
#பதில்#6
#ஆழ்கடலில் ஏற்படும் இருள்
24:40
24:40 اَوْ كَظُلُمٰتٍ فِىْ بَحْرٍ لُّـجّـِىٍّ يَّغْشٰٮهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌؕ ظُلُمٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍؕ اِذَاۤ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰٮهَاؕ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ
24:40. அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிற
Wednesday, 1 March 2017
வினா விடை கேள்வி பதில் தொகுப்பு
கேள்வி:1
இஸ்லாத்தில் சிறந்தது எது?
பதில்:1
11. “இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?“ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு “எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
12. “ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் “இஸ்லாத்தில் சிறந்தது எது“ எனக் கேட்டதற்கு, “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்“ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:2
உண்மையான இறைநம்பிக்கையாளரின் குணம் எப்படி இருக்கும்?
பதில்:2
15. “உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:3
ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவரின் ஏதாவது ஒரு தன்மையை குறிப்பிடுக?
பதில்:3
16. “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:4
“ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம்? நயவஞ்சகத்தின் அடையாளம் எது?
பதில்:4
17. “ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:5
எது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
பதில்:5
வெட்கம்
24. “அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, “அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:6
“செயல்களில் சிறந்தது எது?“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்:6
26. “செயல்களில் சிறந்தது எது?“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது“ என்றார்கள். “பின்னர் எது?“ என வினவப்பட்டதற்கு, “இறைவழியில் போரிடுதல்“ என்றார்கள். “பின்னர் எது?“ என்று கேட்கப்பட்டதற்கு, “அங்கீகரிக்கப்படும் ஹஜ்“ என்றார்கள்“ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:7
“இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?“என்று முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்?
பதில்:7
28. “ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?“ என்று கேட்டார். “நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:8
“நயவஞ்சகனின் அறிகுறிகள் எத்தனை ஏதாவது ஒன்று கூறுக?
பதில்:8
33. “நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
கேள்வி:9
வடிகட்டிய முனாபிக்கின் பண்புகள் எவை ஏதாவது ஒன்று கூறுக?
பதில்:9
34. “நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;
Subscribe to:
Posts (Atom)