Wednesday, 30 November 2016


இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில்





கேள்வி:::❓1

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யலாமா?



Tym Up...!!!
பதில்::✔ 1
#செய்யலாம் 


'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
புஹாரி : 2679


கேள்வி:::❓2
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் இரவில் தூங்கும்பொழுது காவலுக்கு ஒரு ஆள் தேவைப்பட அதை ஏற்று நபி(ஸல்) அவர்களுக்கு காவலில் இருந்த நபித்தோழர் யார்?


Tym Up...!!!

பதில்::✔ 2
#ஸஅத்_இப்னு_அபீ_வக்காஸ்(ரலி)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.அறிவிப்பாளர்:ஆயிஷா (ரலி)
புஹாரி : 2885 


கேள்வி:::❓3
கோடிட்ட இடத்தை நிரப்புக :

நீங்கள் ___________, ____________ ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், ____________, ___________ ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்?


Tym Up...!!!
பதில்::✔ 3

#நன்மையிலும்_இறையச்சத்திலும்
#பாவத்திலும்_வரம்பு_மீறலிலும்


நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்"(05,02)


கேள்வி:::❓4
நல்ல நண்பனிற்கும் தீய நண்பனிற்கும் உதாரணமாக நபி(ஸல்) எதை கூறினார்கள் ?



Tym Up...!!!
பதில்::✔ 4

#கஷ்தூரி

#துருத்தி_ஊதுபவன்


   “நல்ல நண்பன் கஷ்தூரி வியாபாரியைப் போலாவான். இன்னும் தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போன்றவன். கஷ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக அதைத் தரக்கூடும். அல்லது உன்னிடம் அதை விற்கக்கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக் கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்து விடக்கூடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீ அடைய நேரும்” என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி)
   நூற்கள்: புஹாரி  2101, முஸ்லிம் 5534.




கேள்வி:::❓5
அபூ ஜஹ்ல் எந்த போரில் கொல்லப்பட்டான்?


Tym Up...!!!
பதில்::✔ 5

#பத்ரு_போர் 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ர­லி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.

அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.

சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி0 சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி­) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ர­லி) அவர்களும் ஆவர்.
 புகாரீ 3141


கேள்வி:::❓6

நபி(ஸல்) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களிடம் மரணத்தருவாயில் இருக்கும் பொழுது இரண்டு ரகசியங்களை கூறினார்கள்.முதலில்  சொன்னதற்கு அழுதார்கள். இரண்டாவதாக சொன்னபோது சிரித்தார்கள் அது என்ன என்ன ரகசியங்கள் ??


Tym Up...!!!
பதில்::✔ 6
#நோயின்_வழியால்_இறப்பது 
#எனக்குப்பிறகு_மரணத்தை_சந்திக்கும்_முதல்_நபர்_நீதான் 

'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின் குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று கூறினார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்' என்று பதிலளித்தார்கள். 

 புகாரீ3716

கேள்வி:::❓7

கபுருக்கு அருகில் சென்றாலே அவர்களின் தாடி நனையும் அளவுக்கு அழுவார்கள். அவர் யார்? ஏன் அவ்வாறு அழுதார்கள்? 


Tym Up...!!!
பதில்::✔ 7
#உஸ்மான்_(ரழி)
#கப்ர்_மறுமையின்_முதற்படியாகும்_அதில்_வென்றால்_அதற்குப்_பின்னாலுள்ளது_மிக_இலகுவானது_அதில்_வெல்லவில்லை_என்றால்_அதற்குப்பின்னாலுள்ளது_மிகவும்_கடினமானது


உஸ்மான் (ரழி) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹானி
ஆதாரம்: அஹ்மத் 454



கேள்வி:::❓8
நாம் எதை அதிகமாக நினைவு கூறவேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள்?


Tym Up...!!!
பதில்::✔ 8

#மரணம்

‘இன்பங்களைத் தகர்க்கக் கூடியதை அதிகமாக நினைவுகூறுங்கள்’ என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம்

Sunday, 27 November 2016


இஸ்லாமிய வினா விடை 


💐💐💐 கேள்வி 1 💐💐💐: அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?
        
பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)
  
💐💐💐 கேள்வி 2. 💐💐💐 சொர்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு எது?
   
பதில் :  பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதை  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல் : புகாரி).
  
💐💐💐 கேள்வி 3 💐💐💐. மறுமை நாளில் சொர்க்கத்தின் கதவை முதன் முதலில் தட்டுபவர் யார்?
  
 நபி (ஸல்) அவர்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல் : முஸ்லிம்).
  
💐💐💐 கேள்வி 4 💐💐💐. மறுமை நாளில் முதலில் பரிந்துரை செய்பவர் யார்?
  
பதில் நபி (ஸல்) அவர்கள்.  (அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) - நூல் : முஸ்லிம்).
  
💐💐💐 கேள்வி 5. 💐💐💐 நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின், நபியவர்களின் மனைவியரில் முதன் முதலில் மரணித்தவர் யார்?
  
 பதில் . ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்.  (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்கள் : புகாரி, முஸ்லிம்).
  
💐💐💐 கேள்வி. 6 💐💐💐
சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உணவு எது?
    
பதில் சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளை  மாடு  அவர்களுக்காக  அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப்படும்.  (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்: முஸ்லிம்).

💐💐💐 கேள்வி7.💐💐💐  மறுமை நாளில் முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் யார்?
   
பதில் இப்ராஹீம் (அலை) அவர்கள்.  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி).

💐💐💐 கேள்வி 8 💐💐💐. மறுமையில் முதன் முதலில் விசாரிக்கப்படும் சமுதாயம் யாருடைய சமுதாயம்?

  பதில் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: இப்னு மாஜா).

💐💐💐 கேள்வி 9 💐💐💐. முதன் முதலில் ஸம்ஸம் நீரைக் குடித்தவர் யார்?
    
பதில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) அவர்கள்.   (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி).

💐💐💐 கேள்வி 10. 💐💐💐 : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
  
 பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)




Saturday, 26 November 2016

இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில்
♣1. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும்போது என்ன செய்ய வேண்டும்?

♠விடை : இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும்! அவனிடம் மன்னிப்புத் தேட வேண்டும்! அவன் மன்னிப்பை ஏற்பவன்!
[திருக்குர்ஆன் - 110:3]


♣2. "அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது".
(யாருடைய கழுத்தில்?)

♠விடை : அபூலஹபுடைய மனைவியின் கழுத்தில்..
   கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.
அபூலஹப்பின் செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை!
[குர்ஆன் - 111: 1,2,3,4,5]


♣3. ஹூதமா என்றால் என்ன?

♠விடை : மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு!
[குர்ஆன் - 104:6]


♣4. மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக ____ தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.
அ. கல்வியை
ஆ. செல்வத்தை


♠விடை : ஆ. செல்வத்தை.

   மண்ணறைகளை சந்திக்கும் வரை அதிகமாக செல்வத்தை தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பிவிட்டது.
[குர்ஆன் - 102:1,2]


♣5. வேதம் கொடுக்கப்பட்டோர் தமக்குத் ____ வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை!
அ. தீங்கு
ஆ. தெளிவானசான்று


♣6. படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் யார்?


♠விடை : (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே "படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்".
[குர்ஆன் - 98:6]


♣7. இறைவன் தான் உங்களுக்கு ____வை ஆடையாகவும், ____யை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கிறான்!


♠விடை : இரவை, நித்திரையை

   இறைவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கிறான்!
[குர்ஆன் - 25:47]


♣8. இறைவிசுவாசிகளே! இறைவனை மிக அதிகமாக ____ செய்யுங்கள்!

♠விடை : தியானம்

   இறைவிசுவாசிகளே! இறைவனை மிக அதிகமாக தியானம் செய்யுங்கள்!
[குர்ஆன் - 33:41]

♣9. இறைவனிடத்தில், எல்லாக் காரியங்களையும் விட நன்மையானது விஷயம் எது?

♠விடை : பயபக்தியோடு இருப்பது..

   இறைவனிடம் பயபக்தியோடு இருப்பதே எல்லா காரியங்களைவிட நன்மையானது!
[குர்ஆன் - 3:186]


♣10. ____ செய்யும் மோசத்தையும், ____ மறைத்து வைப்பதையும் இறைவன் நன்கறிவான்!


♠விடை : கண்கள், உள்ளங்கள்

   கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்!
[குர்ஆன் - 40:19]

Rosana binth abbas

Friday, 25 November 2016

அஸ்ஸலாமுஅலைக்கும்

இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில் 



♠1. திருக்குர் ஆன் முஸ்லீம்களுக்கு
மட்டும்அருளப்பட்ட வேதமா ?
இல்லை அகில உலக மக்களுக்கும்
உண்டான வேதமா ?

♣ANS-அகில உலக மக்களுக்கும்
வழிகாட்டியாக அருளப்பட்ட வேதம் –
(68:52)

♠2. நம்முடைய பெற்றோருக்காக நாம்
எவ்வாறு துஆ செய்ய வேண்டும் என
அல்லாஹ் தன் திருமறையில்
குறிப்பிடுகிறான் ?

♣ANS-இன்னும் இரக்கம் கொண்டு பணிவு
என்னும் இறக்கையை
அவ்விருவருக்காகவும் நீ
தாழ்த்துவீராக!. மேலும் என் இறைவா
நான் சிறு பிள்ளையாக இருந்த போது
என்னை பரிவோடு அவ்விருவரும்
வளர்த்தது போல் நீயும்
அவ்விருவருக்கும் கிருபை
செய்வாயாக என்று பிரார்த்திப்பீராக.
அல் குர்ஆன் – அத்:17 வசனம் 24

♠3. அல்லாஹ்வை திக்ர் (நினைவு
கூறல்) எவ்வாறு செய்ய வேண்டும்?

♣ANS-அல்லாஹ்வை நினைவு கூறும் போது
பணிவுடனும் அச்சத்துடனும்
குறிப்பாக சொல்லில் உரத்த சப்தமின்றி
செய்யவேண்டும்.
அல் குர்ஆன் அத்:7 வசனம்:205

♠4. மார்க்கத்தை கற்று அதன்படி
செயல்படாதவர்களின் நிலையை
அல்லாஹ் எதனுடன் ஒப்பிடுகிறான் ?

♣ANS-ஏடுகளை சுமக்கும் கழுதைக்கு
ஒப்பானதாகும் அல் குர்ஆன் 62:5

♠5. 
40 வயதாகும் போது ஒருவருக்காக
அல்லாஹ் துஆ செய்யச்சொல்கிறான்
யாருக்காக ?

♣ANS-பெற்றோருக்காக துஆ செய்யும் படி
இறைவன் குறிப்பிடுகிறான். (”மனிதன்
தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்
படி நாம் உபதேசம் செய்தோம்” என
ஆரம்பிக்கும் குர் ஆன் வசனமாகும்)
அல் குர்ஆன் அத்:46 வசனம்:15

♠6. சூரத்துல் யாஸீனில் 70வது
வசனத்தின் மூலம் நாம் பெறும்
விளக்கம் என்ன ?

♣ANS-”இது உயிரோடு இருப்பவர்களை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.
நிராகரிப்பவர்களுக்கு தண்டணை
உண்டு என்ற வாக்கை உண்மையென
உறுதி படுத்துகிறது” அல் குர்ஆன் –
யாஸீன் -70

♠7. இறந்தவர்கள் செவியேற்க
மாட்டார்கள் என்று கூறும் திருக்குர்
ஆன் வசனம் என்ன ?

♣ANS-நிச்சயமாக நீர் மரணித்தோரை
செவியேற்க செய்ய முடியாது.
அவ்வாறே செவிடர்களையும் அவர்கள்
புறங்காட்டி திரும்பி விடும்போது (உம்)
அழைப்பை நீ செவியேற்க செய்ய
முடியாது. 27: 80, 30:52

♠8. ஜின்களை எதற்காக படைத்தான் ?
என்பதை அல்லாஹ் திருமறையில்
ஸூரத்துத் தாரியாத்தில் எந்த
வசனத்தில் ? என்ன கூறுகிறான் ?

♣ANS-இன்னும் ஜின்களையும்
மனிதர்களையும் அவர்கள் என்னை
வணங்குவதற்காகவேயன்றி நான்
படைக்கவில்லை அல் குர்ஆன் 51:56

♠9. திருக்குர் ஆனில் தொழாதவர்களின்
நிலை என்ன என்பதை எவ்வாறு
எச்சரிக்கிறது.?

ANS-குர் ஆனில் தொழாதவர்கள் நிலை
அவர்களை நரகத்தில் கொண்டு
சேர்க்கும் என எச்சரிக்கிறது.
“குற்றவாளிகளிடம் உங்களை
நரகத்தில் சேர்த்தது எது என்று
விசாரிப்பார்கள். நாங்கள்
தொழுவோராகவும் ஏழைக்கு
உணவளிப்போராகவும் இருக்கவில்லை
எனக் கூறுவார்கள்
அத்தியாயம் 74: வசனங்கள் 41-43.



10. குர் ஆனில் பெயர் கூறப்பட்ட
வேதங்கள் எத்தனை ? எந்தெந்த
நபிமார்களுக்கு அவ்வேதங்கள்
அருளப்பட்டது.


4 வேதங்கள் 
1.தாவூத் (அலை)-
ஸபூர்
2.மூஸா (அலை) – தோரா 
3.ஈஸா (அலை) இன்ஜில் (பைபிள்)
4.முஹம்மது நபி(ஸல்) – அல்
குர்ஆனஇஇ

Thursday, 24 November 2016

இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில்

கேள்வி 1:
ஒருவருடைய அன்றாடப் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைவது எது?

பதில்:
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்“ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது“ என நபித் தோழர்கள் கூறினர். “இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 9.
528

கேள்வி 2:
“எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. என நபி (ஸல்)அவர்கள் கூறியன எவை?
தெரிந்த ஒன்றைக் கூறுங்கள்,

பதில்:2
. “எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

1:எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன்.
2 :பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது.

3: என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்!

4 :போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை.

5 : (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 7. தயம்மும்

கேள்வி 3:
எந்தப் பிரார்த்தனையின் போது நபி (ஸல்)அவர்கள் தம் கைகளை அதிகம் உயர்த்துவார்கள்?

பதில் :3
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவிற்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு அவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ”அவர்கள் ”தமது அக்குளின் வெண்மை” அல்லது ”அக்குள்களின் வெண்மை”  தென்படும் அளவிற்கு (உயர்த்தினார்கள்)” என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 9. :1631

கேள்வி 4:
ஓர் அடியார் தமக்குத் துன்பம் ஏற்படும் போது என்ன கூற வேண்டும்?

பதில் :4 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
”ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது ”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி... என்று) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. :1675

கேள்வி 5:
செயல்களில் சிறந்தது எது?

பதில் :5
“செயல்களில் சிறந்தது எது?“ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது“ என்றார்கள். “அதற்குப் பிறகு எது (சிறந்தது)?“ எனக் கேட்கப்பட்டபோது, “இறைவழியில் போர்புரிதல்“ என்றார்கள். “அதற்குப் பிறகு எது (சிறந்தது?)“ எனக் கேட்கப்பட்டபோது “பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்“ என்று பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 25.:1519

கேள்வி 6:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் எவ்வாறு காட்சியளிப்பார்கள் ?

பதில் :6
“சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. :3327

கேள்வி 7:
இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

பதில் 7
 “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும். ஷஹீஹ் புகாரி 3329

கேள்வி 8:
மக்களிடையே எதற்காகப் பொய் சொல்பவன் பொய்யனாகக் கருப்பட மாட்டான்

பதில்:8
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 53
2692

கேள்வி 9:
நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?

பதில் 9
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்
நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, “நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?“ என்று அவர்களிடம் வினவப்பட்டது. “பத்தொன்பது“ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64
3949

கேள்வி 10
கடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில்அமராமல் மறதியால் எழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:
அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 22.
1224

Farhana fathima
இஸ்லாம் வினா விடை


1 ) 'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் -----------புகுவார் கோடிட்ட இடத்தை நிரப்புக .?

பதில் : 'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் #சுவர்க்கம் புகுவார் ,,ஆதாரம் புகாரி 129

2 ) கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன பதில் கூறினார்கள் ?

பதில் ; அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்' என்றார்கள் .. ஆதாரம் புகாரி 1397

3 ) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு ---------- தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  கோடிட்ட இடத்தை நிரப்புக .?

பதில் : 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு #நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகாரி 60

4 ) இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,என்ன பதில் கூறினார்கள் ?

பதில் : அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள். புகாரி 806

5 ) நரகம் செல்பவர்களின் உடலில் ஓர் அடையாளமிருந்தால் அந்த பகுதியை நரகம் தீண்டாது அது என்ன அடையாளம் கூறுங்கள் ?

பதில் : அல்லாஹ்விற்காக ஸஜ்தா செய்தவறின் நெற்றியில் உள்ள வடுக்களை நரகம் தீண்டாது  புகாரி 806

6 ) ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்றார்கள்.  உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள்,என்ன பதில் கூறினார்கள் ?

பதில்  : நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது.  ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்' எனக் கூறினார்கள். புகாரி 1367

7 )
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் --------நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (----- நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. கோடிட்ட இடத்தை நிரப்புக ?

பதில் :
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் #நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு .அதே போன்ற காலத்தில் (#40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. புகாரி 3208

8 ) 'பிற முஸ்லிம்கள் எவருடைய .------,-------- தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். கோடிட்ட இடத்தை நிரப்புக .

பதில் : 'பிற முஸ்லிம்கள் எவருடைய #நாவு, #கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். புகாரி 10

9 ) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும்.அது எந்த வாக்கியம் கூறுங்கள் ?

பதில் : 6682. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) #சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; #சுப்ஹானல்லாஹில் அழீம்.
(பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.78

10 ) அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய --------- மாறும்.கோடிட்ட இடத்தை நிரப்புக .?

பதில் : அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய #பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்' 'நானே உன்னுடைய புதையல்' என்று கூறும்.' புகாரி 1403

Amir rajbu
இஸ்லாமிய கேள்வி பதில் தொகுப்பு இல ~ 236 


♥கேள்வி 1

ஹூத் நபியை ஏற்றுக் கொள்ளாத மக்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள்???


♠பதில் : சூடேற்றப்பட்ட கல் மழையை இறக்கி அழித்தான்.   (15:74)

♥கேள்வி 2

அற்புதங்கள் வழங்கப்படுவதின் நோக்கம் என்ன??


♠பதில் :2

அச்சுருத்தவே அற்புதங்களை கொடுக்கிறான்  (17:59)

♥கேள்வி 3

ஷைத்தான் மனிதனை வழிகெடுக்கப் பயன்படுத்திய ஒரு வகை என்ன?

♠பதில் : 3    

குரல்  (17:64)

♥கேள்வி :4

அநீதி இழைத்தவன் மறுமையில் என்ன சொல்லி புலம்புவான்???

♠பதில் :4

இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே என்று புலம்புவான். (25:27)


♥கேள்வி 5

பிறரிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்தது எது???


♠பதில்:

தமது முதுகில் விறகு கட்டயைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும்.
 (புகாரி 2074)


♥கேள்வி 6

வியாபாரம் செய்யும் போது குறைகளை மறைத்துப் பொய் சொன்னால் என்ன ஏற்படும்???


♠பதில்:6

வியாபாரத்தில் அருள் வளம் நீக்கப்படும். 
( புகாரி 2079)


♥கேள்வி 7

இறைவனைப் பார்க்க வேண்டும் என்று மூஸா (அலை) அவர்கள் கேட்ட போது அல்லாஹ் என்ன கூறினான்???


♠பதில்:

என்னை பார்க்கவே முடியாது என்று பதிலளித்தான் (7:143)


♥கேள்வி 8

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை என்ன???


♠பதில்:8

அறியாமைக் காலக் கடைவீதிகள்   
( புகாரி 2098)


♥கேள்வி 9

பெண்களுக்குரிய அறப்போர் என்ன?


♠பதில் :9

பாவச்செயல் கலவாத ஹஜ் தான் பெண்களுக்குரிய சிறந்த அறப்போர்.  

(புகாரி 2784)


♥கேள்வி 10

மலைகளை வீடாக்கி குடியிருந்த சமுதாயம் எது??


♠பதில் :

சமூது எனும் ஹிஜ்ர் சமுதாயம் (15:82)


♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

Rosana binth abbas

Monday, 21 November 2016

அஸ்லாமு அலைக்கும் வரஹ் ....

இஸ்லாம் வினா விடை
கேள்வி பதில் நாள் 238

கேள்வி::1⃣👇👇👇

 என் இறைவா இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக என்று அல்லாஹ்விடம் வேண்டிய இறைத்தூதர் யார்::???

.🎈🎈 பதில் ::👇👇👇

#இப்ராஹிம் நபி

ஆதாரம்

அல்குர்ஆன்  2:260

♧♧♧♧♧♧♧
//////////////

.🎈🎈கேள்வி ::2⃣👇👇👇

இவ்வுலகம் இறைநம்பிக்கையாளர்களுக்கு
என்னவாக இருக்கிறது:: ?

#பதில்::

#சிறைச்சாலையாக

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் #சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5663

///////////...

 🎈🎈கேள்வி::3⃣👇👇👇

(விடுபட்ட இடத்தை சரியான வார்த்தையை கொண்டு நிரப்புக )

____________ செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
..

🎈🎈 பதில்::👇👇👇

#தர்மம்

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.

திருக்குர்ஆன்  57:18

///////////////

🎈🎈கேள்வி::👇👇👇

உங்களுக்கு #முன்_சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இதில் முன் சென்றவர்கள் என்று எவர்களை குறிப்பிட்டு நபி ( ஸல்) கூறினார்கள் ::??

 🎈🎈பதில்::👇👇👇

 #யூதர்களையும்_கிறித்துவர்களையும்

உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது #யூதர்களையும்_கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

////////////!

.🎈🎈கேள்வி:::6⃣👇👇👇

எந்த உணவில் சைத்தான்  பங்கேற்கின்றான்  :::???

#பதில்::

உணவு உண்பதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். இறைவனுடைய பெயரை கூறாமல் உணவு உட்கொண்டால் அந்த உணவில் ஷைத்தானும் பங்கேற்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

நூல் : முஸ்லிம் (4105)

//////////////
 🎈🎈 கேள்வி::7⃣👇👇👇

தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆண்கள் அதை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும்..?
..

🎈🎈 பதில்:::👇👇👇

ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறுவதன் மூலம்

நூல்கள்: புகாரீ 1218,

/////////////

🎈🎈🎈கேள்வி:::8⃣👇👇👇
 (விடுபட்ட இடத்தை சரியான வார்த்தையை கொண்டு நிரப்புக )

அவன் இரவை உங்களுக்கு ஆடையாகவும உறக்கத்தை______________,வும்,  பகலை ________________வும் படைத்தான்

🎈🎈பதில் :::👇👇👇

#ஓய்வாகவும்_இயங்குவதற்காகவும்

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

திருக்குர்ஆன்  25:47

//////////////

🎈🎈கேள்வி:::9⃣👇👇👇

ஜிப்ரில் ( அலை) அவர்கள் நபிகளார் வழியாக அன்னை ஆயிஷா ரலி அவர்களுக்கும் ஸலாம் கூறினார்களா???

🎈🎈பதில்:::👇👇👇

ஆம்(ஸலாம் கூறினார்கள் )

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், “வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்.  ஆயிஷா(ரலி) “நீங்கள்“ என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
ஷஹீஹ் புகாரி: 3217

///////////

🎈🎈கேள்வி ::: 10👇👇👇

நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள் என்று நபியவர்கள் கூறிவிட்டு ஒன்றை செய்யுமாறு போதித்தார்கள்.. நபியவர்கள் போதித்த அந்த செயல் என்ன ???

🎈🎈பதில் ::👇👇👇

#உங்களிடையே_ஸலாமை_பரப்புங்கள்_என்று_கூறினார்கள்

'நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு 'உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்' என்றனர்.

Saturday, 19 November 2016


இஸ்லாமிய கேள்வி பதில் தொகுப்பு இல ~ 236


♥கேள்வி 1

ஹூத் நபியை ஏற்றுக் கொள்ளாத மக்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள்???


♠பதில் : சூடேற்றப்பட்ட கல் மழையை இறக்கி அழித்தான்.   (15:74)

♥கேள்வி 2

அற்புதங்கள் வழங்கப்படுவதின் நோக்கம் என்ன??


♠பதில் :2

அச்சுருத்தவே அற்புதங்களை கொடுக்கிறான்  (17:59)

♥கேள்வி 3

ஷைத்தான் மனிதனை வழிகெடுக்கப் பயன்படுத்திய ஒரு வகை என்ன?

♠பதில் : 3  

குரல்  (17:64)

♥கேள்வி :4

அநீதி இழைத்தவன் மறுமையில் என்ன சொல்லி புலம்புவான்???

♠பதில் :4

இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே என்று புலம்புவான். (25:27)


♥கேள்வி 5

பிறரிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்தது எது???


♠பதில்:

தமது முதுகில் விறகு கட்டயைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும்.
 (புகாரி 2074)


♥கேள்வி 6

வியாபாரம் செய்யும் போது குறைகளை மறைத்துப் பொய் சொன்னால் என்ன ஏற்படும்???


♠பதில்:6

வியாபாரத்தில் அருள் வளம் நீக்கப்படும்.
( புகாரி 2079)


♥கேள்வி 7

இறைவனைப் பார்க்க வேண்டும் என்று மூஸா (அலை) அவர்கள் கேட்ட போது அல்லாஹ் என்ன கூறினான்???


♠பதில்:

என்னை பார்க்கவே முடியாது என்று பதிலளித்தான் (7:143)


♥கேள்வி 8

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை என்ன???


♠பதில்:8

அறியாமைக் காலக் கடைவீதிகள்  
( புகாரி 2098)


♥கேள்வி 9

பெண்களுக்குரிய அறப்போர் என்ன?


♠பதில் :9

பாவச்செயல் கலவாத ஹஜ் தான் பெண்களுக்குரிய சிறந்த அறப்போர்.

(புகாரி 2784)


♥கேள்வி 10

மலைகளை வீடாக்கி குடியிருந்த சமுதாயம் எது??


♠பதில் :

சமூது எனும் ஹிஜ்ர் சமுதாயம் (15:82)


Rosana binth abbas


♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
அஸ்ஸலாமு அலைக்கும் 
வறஹமத்துல்லாஹி 
வபறகாத்துஹூ 




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இஸ்லாம் வினா  விடை

#கேள்வி_பதில்_தொகுப்பு 191வது

கேள்வி: 1

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் அவ்வூராரையும் நம்பிக்கையாளரையும் அல்லாஹ் எவ்வாறு ஆக்கினான்?

பதில்:

அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும் அவர்கள் கைகளை உங்களை விட்டும் தடுத்தான்.

48:24

கேள்வி: 2

லூத் நபியின் சமுதாயத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர்கள் யார்?

பதில்:

லூத் நபியின் குடும்பத்தாரை தவிர யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை அவரின் மனைவியை தவிர....

51:35,36

கேள்வி: 3

போருக்கு வரதா கிராம வாசிகள் நபியிடம் வந்து என்ன கூறினார்கள் ?

பதில்:

எங்கள் செல்வங்களும் எங்கள் குடும்பங்களும் எங்களை திசை திருப்பி விட்டன. எனவே எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக என கூறினர்.

48:11

கேள்வி :4

அவர்கள் உண்மையில் என்ன நினைத்து போருக்கு வராமல் தங்கினார்கள்?

பதில்:

இத்தூதரும் நம்பிக்கை கொன்டோரும் தமது குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப வர மாட்டார்கள் என்று நினைத்தனர்.

48:11

கேள்வி: 5

போருக்கு செல்லாமல் இருப்பது யார் மீது குற்றமில்லை?

பதில்:

குருடர் மீது குற்றமில்லை நொண்டியின் மீது குற்றமில்லை நோயாளியின் மீது குற்றமில்லை.

48:17

கேள்வி: 6

நேர்வழி பெற்றோருக்கு அல்லாஹ்  எதை அதிகமாக்குகிறான். எதை வழங்குகிறான்?

பதில்:

நேர்வழியை அதிகமாக்கி தன்னை பற்றி அச்சத்தை வழங்குகிறான்.

47:17

கேள்வி: 7

நபி( ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவதை கேட்ட ஜின் கூட்டம் தம் சமுதாயதாரிடம் என்ன கூறியது? எவ்வாறு சென்றது?

பதில்:

வாயை மூடுங்கள் எனக் கூறியது . ஓதி முடிக்கப் பட்டதும் எச்சரிப்போராக தமது சமுதாயத்தாரிடம் சென்றது.

46:29

கேள்வி: 8

நிராகரிப்போரிடம் தெளிவான வசனங்களை அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் இதை கூறுவதை தவிர வேறு ஆதாரம் சொல்லமாட்டார்கள்?

பதில்:

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களை கொண்டு வாருங்கள் என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது ஆதாரமாக இல்லை.

45:25

கேள்வி: 9

அல்லாஹ்வின் உதவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?  அப்படி செய்தால் அல்லாஹ் எதை உறுதிப்படுத்துகிறான்?

பதில்:

நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துகிறான்.

47:7

கேள்வி: 10

மனிதர்களில் சிலரை சிலரைவிட தகுதிகளை உயர்திருப்பது எதனால் என்று அல்லாஹ் கூறுகிறான்?

பதில்:

அவர்களில் ஒருவர் மற்றவரை பணியாளராக ஆக்குவதற்கு.

43:32

Rosana binth abbas