Wednesday, 30 November 2016
இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில்
கேள்வி:::❓1
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யலாமா?
Tym Up...!!!
பதில்::✔ 1
#செய்யலாம்
'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
புஹாரி : 2679
கேள்வி:::❓2
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் இரவில் தூங்கும்பொழுது காவலுக்கு ஒரு ஆள் தேவைப்பட அதை ஏற்று நபி(ஸல்) அவர்களுக்கு காவலில் இருந்த நபித்தோழர் யார்?
Tym Up...!!!
பதில்::✔ 2
#ஸஅத்_இப்னு_அபீ_வக்காஸ்(ரலி)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.அறிவிப்பாளர்:ஆயிஷா (ரலி)
புஹாரி : 2885
கேள்வி:::❓3
கோடிட்ட இடத்தை நிரப்புக :
நீங்கள் ___________, ____________ ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், ____________, ___________ ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்?
Tym Up...!!!
பதில்::✔ 3
#நன்மையிலும்_இறையச்சத்திலும்
#பாவத்திலும்_வரம்பு_மீறலிலும்
நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்"(05,02)
கேள்வி:::❓4
நல்ல நண்பனிற்கும் தீய நண்பனிற்கும் உதாரணமாக நபி(ஸல்) எதை கூறினார்கள் ?
Tym Up...!!!
பதில்::✔ 4
#கஷ்தூரி
#துருத்தி_ஊதுபவன்
“நல்ல நண்பன் கஷ்தூரி வியாபாரியைப் போலாவான். இன்னும் தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போன்றவன். கஷ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக அதைத் தரக்கூடும். அல்லது உன்னிடம் அதை விற்கக்கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக் கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்து விடக்கூடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீ அடைய நேரும்” என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி)
நூற்கள்: புஹாரி 2101, முஸ்லிம் 5534.
கேள்வி:::❓5
அபூ ஜஹ்ல் எந்த போரில் கொல்லப்பட்டான்?
Tym Up...!!!
பதில்::✔ 5
#பத்ரு_போர்
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.
அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.
சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி0 சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.
புகாரீ 3141
கேள்வி:::❓6
நபி(ஸல்) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களிடம் மரணத்தருவாயில் இருக்கும் பொழுது இரண்டு ரகசியங்களை கூறினார்கள்.முதலில் சொன்னதற்கு அழுதார்கள். இரண்டாவதாக சொன்னபோது சிரித்தார்கள் அது என்ன என்ன ரகசியங்கள் ??
Tym Up...!!!
பதில்::✔ 6
#நோயின்_வழியால்_இறப்பது
#எனக்குப்பிறகு_மரணத்தை_சந்திக்கும்_முதல்_நபர்_நீதான்
'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின் குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று கூறினார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்' என்று பதிலளித்தார்கள்.
புகாரீ3716
கேள்வி:::❓7
கபுருக்கு அருகில் சென்றாலே அவர்களின் தாடி நனையும் அளவுக்கு அழுவார்கள். அவர் யார்? ஏன் அவ்வாறு அழுதார்கள்?
Tym Up...!!!
பதில்::✔ 7
#உஸ்மான்_(ரழி)
#கப்ர்_மறுமையின்_முதற்படியாகும்_அதில்_வென்றால்_அதற்குப்_பின்னாலுள்ளது_மிக_இலகுவானது_அதில்_வெல்லவில்லை_என்றால்_அதற்குப்பின்னாலுள்ளது_மிகவும்_கடினமானது
உஸ்மான் (ரழி) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹானி
ஆதாரம்: அஹ்மத் 454
கேள்வி:::❓8
நாம் எதை அதிகமாக நினைவு கூறவேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள்?
Tym Up...!!!
பதில்::✔ 8
#மரணம்
‘இன்பங்களைத் தகர்க்கக் கூடியதை அதிகமாக நினைவுகூறுங்கள்’ என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment