Wednesday, 7 December 2016
இஸ்லாமிய வினா விடை தொகுப்பு
1. நிச்சயமாக இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் எது?
அ. கிறிஸ்தவம்
ஆ. இஸ்லாம்
இ. ஆதி-அந்தம் இல்லாத மார்க்கம்
விடை : ஆ. இஸ்லாம்.
இதுவே இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம்!
(திருக்குர்ஆன் - 3:19)
2. இறை விசுவாசிகளே! இறைவனை அதிகமாக ____ செய்யுங்கள்!
விடை : #தியானம்
இறை விசுவாசிகளே! இறைவனை மிக அதிகமாக தியானம் செய்யுங்கள்!
(குர்ஆன் - 33:41)
3. நிச்சயமாக ____ மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டுத் தடுக்கிறது!
விடை : தொழுகை!
இது, மானக்கேடான, மற்றும் தீமையை விட்டும் தடுக்கும்!
(குர்ஆன் - 29:45)
4. எங்கள் கடமை ____ விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை!
விடை : இறைத்தூதை..
எங்கள் கடமை இறைத்தூதை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை!
(குர்ஆன் - 36:17)
5. இறை விசுவாசிகளே! இரட்டிப்பாக்கி அதிகரித்து விடும் ____யை வாங்கி உண்ணாதீர்கள்!
பதில் : வட்டியை!
இறை விசுவாசிகளே! இரட்டிப்பாக்கி அதிகரித்து விடும் வட்டியை வாங்கி உண்ணாதீர்கள்!
(குர்ஆன் - 3:130)
6. யார் சுவனப் பூங்காக்களில் மகிழ்விக்கப் படுவார்கள்?
பதில் :-
எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ, அவர்கள் சுவனப் பூங்காக்களில் மகிழ்விக்கப் படுவார்கள்!
(குர்ஆன் - 30:15)
7. இவ்வுலக வாழ்க்கை எத்தகையது?
பதில் :-
உலகவாழ்க்கை வீண் விளையாட்டு கொண்டது. பயபக்தியானவர்களுக்கு மறுமை வீடே மேலானது!
(குர்ஆன் - 6:32)
8. இறை விசுவாசிகளே! உங்களுடைய ____ளும், ____ளும் இறைநினைவை விட்டும் உங்களை திசை திருப்பிவிட வேண்டாம்!
பதில் : பொருள்களும், சந்ததிகளும்..
இறை விசுவாசிகளே! உங்களுடைய பொருள்களும், சந்ததிகளும் இறைநினைவை விட்டும் உங்களை திசை திருப்பிவிட வேண்டாம்!
(குர்ஆன் - 63:9)
9. யாருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு?
பதில் :-
தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, இறை வழியில் செலவு செய்யாமல் இருப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு!
(குர்ஆன் - 9:34)
இந்த கேள்விக்கு பல பதில்கள் உண்டு
10. இறைவன் வழங்கும் குணங்களில் மிகச்சிறந்த குணம் எது?
பதில் : பொறுமை!
இறைவன் வழங்கும் குணங்களில் மிகச்சிறந்த குணம் பொறுமையே!
[நூல்கள் : புகாரி & முஸ்லிம்
அறிவிப்பவர் : அபூஸயீத அல்குத்ரீ (ரலி)]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment