Saturday, 24 December 2016


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

95வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு

1)👉🏿✍🏻 question ✍🏻👇🏻

 #கேள்வி 1

ஷைத்தான் எப்போது விரண்டோடுவான்???

 #பதில் : தொழுகைக்காக அழைப்பு செய்யும் போது (பாங்கு சொல்லும் போது)

634. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
 #கேள்வி 2

27 மடங்கு நன்மைகள் எதனால் கிடைக்கும் என நபி அர்கள் கூறினார்கள்???

 #பதில்: ஜமாத்தாக தொழுதால்

645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.”  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

~~~~~~~~~~~~~~~~~~~~~~

#கேள்வி 3

யார் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் என நபி அவர்கள் கூறினார்கள்????

#பதில் : சுபுஹ் தொழுதவர்

1163. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹுத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டுகொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம். இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #கேள்வி 4

தொழுகைகளையும் ---------------- ஐயும் பேணிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு ------------------- நில்லுங்கள்

 #பதில் : நடுத்தொழுகையையும், கட்டுப்பட்டு 

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ

 தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! 

திருக்குர்ஆன்  2:238
~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #கேள்வி 5

எந்த இரண்டு (பர்ளான) தொழுகை நரகத்திலிருந்து காக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்????

#பதில்  ஃபஜ்ர்,  அஸர்

1115. அபூபக்ர் பின்  உமாரா பின் ருஐபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைந்த பின்னரும் தொழுதவர் (அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர்) எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள்  கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், ”இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் ”ஆம்” என்றார்கள். அந்த மனிதர் ”நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக்கொண்டது” என்று கூறினார். இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~
 #கேள்வி 6

பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியே செல்லலாமா????

 #பதில்

செல்லக் கூடாது

1160. அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்தார். உடனே (அங்கிருந்த) ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அந்த மனிதர் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, ”கவனியுங்கள்: இவர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #கேள்வி 7

கழிவறைக்குள் இருக்கும் போது ஒருவர் ஸலாம் சொன்னால் பதில் சொல்லலாமா????

 #பதில்

கூடாது

606. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்துசென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 3. மாதவிடாய்
~~~~~~~~~~~~~~~~~~~~~~

#கேள்வி8

கழிவறையில் இருந்து வெளியேறும் போது என்ன துஆ ஓத வேண்டும்????

 #பதில்

குஃப்ரானக்க

திர்மிதி (7)

~~~~~~~~~~~~~~~~~~~~~~
 #கேள்வி9

குரல்களில் வெறுக்கத்தக்கது என்று எந்த குரலை 

No comments:

Post a Comment