Saturday, 24 December 2016


அஸ்ஸலாமுஅலைக்கும்
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ 

#கேள்வி_பதில்_தொகுப்பு_180து

வினா ➡0⃣1⃣⁉️

சொர்க்கத்தில்  சிறந்த கூலி ,அழகிய தங்குமிடம் எவ்வாறு இருக்கும் என அல்லாஹ் கூருகின்றான்?

விடை ➡0⃣1⃣✔

அவர்களுக்கு நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள இருக்கைகளில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.

குர்ஆன்  18:31,  76:21

வினா ➡ 0⃣2⃣⁉️

பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?

விடை ➡0⃣2⃣✔

 யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை

வினா ➡0⃣3⃣⁉️

கொலையைவிட கொடிய செயல் எது?

விடை➡0⃣3⃣✔

பித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்)

 அல்குர்ஆன் 2:191,  2:217)

வினா➡0⃣4⃣⁉️

ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் தருக?

விடை➡0⃣4⃣✔

முதல் மாதம் முஹர்ரம்,
இரண்டாம் மாதம் ஸபர்,
முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,
நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,
ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,
ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,
ஏழாம் மாதம் ரஜப்,
எட்டாம் மாதம் ஷாஃபான்,
ஒன்பதாம் மாதம் ரமழான்,
பத்தாம் மாதம் ஷவ்வால்,
பதினோன்றாம் மாதம் துல் கஅதா,
பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.

வினா ➡0⃣5⃣⁉️

மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

விடை ➡0⃣5⃣✅

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (22 : 47)

வினா ➡0⃣6⃣⁉️

சுய மரியாதையை பேணுவதற்கு இஸ்லாம் கூறும் வழிகள் என்ன ?

விடை ➡0⃣6⃣✔

1469 , 1471 , 1428 ➖புகாரி

நபி(ஸல்) அவர்களிடம் ..... “என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை“ என்றார்கள்.

வினா ➡0⃣7⃣⁉️

நபி (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜை பற்றி ஒரு பெண் கேட்ட கேள்வி என்ன ?

விடை➡0⃣7⃣✅

1513 ➖புகாரி

 அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 

“இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது #முதிர்ந்த #தந்தையால் பயணிக்க முடியாது. எனவே #நான் அவருக்குப் பகரமாக #ஹஜ் #செய்யலாமா? எனக் #கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “ஆம்!“ என்றார்கள்.

வினா ➡⁉️0⃣8⃣

நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நபி கொடுத்த தண்டனை என்ன ?

விடை ➡✔0⃣8⃣

1501➖புகாரி

உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடீப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் #கொலை செய்துவிட்டு #ஒட்டகங்களையும்_ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் #கைகளையும்_கால்களையும்_வெட்டினார்கள்; #கண் (இமை)களின் ஓரங்களில் #சூடிட்டார்கள்; அவர்களைக் #கருங்கற்கள்_நிறைந்த_ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படிவிட்டுவிட்டார்கள்.

வினா➡0⃣9⃣⁉️

தர்மம் செய்ய முடியாதவர் நன்மையை பெறும் வழிகள் எது ?

விடை ➡✅0⃣9⃣

1445 ➖ புகாரி 

“இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?“ எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்“ என்றனர். தோழர்கள், “அதுவும் முடியவில்லையாயின்“ எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்“ என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலாவில்லையாயின்“ என்றதும் “நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!“ எனக் கூறினார்கள்.

வினா➡ 1⃣0⃣

அல்லாஹ் வெறுக்கும் மூன்று விசயங்கள் எவை ?

விடை ➡1⃣0⃣✔

1477➖புகாரி 

 “நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என #ஆதாரமின்றிப்_பேசுவது). #பொருள்களை_வீணாக்குவதும் 
#அதிகமாக (பிறரிடம்) #யாசிப்பதும்!“

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment