Wednesday, 7 December 2016


இஸ்லாமிய வினா விடை தொகுப்பு 


கேள்வி:::1

ஜைனப் பின்த் குஸைமா ரலி அவர்கள் எப்போது மரணித்தார்கள்..?  
நபியின் மனைவி

பதில்::

ஹிஜ்ரி 4ம்ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் ஜைனப் மரணித்தார்கள்.

நூல் அல் இஸாபா : 11230

கேள்வி::2

அன்னை ஜைனப் (ரலி) அவர்களுக்கு யார் ஜனாஸா தொழுகை நடத்தினார் எந்த மைய வாடியில் அடக்கம் செய்தார்கள்.?

பதில்::

நபி(ஸல்) அவர்கள் அன்னை ஜைனப் (ரலி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி பகீஃ என்ற பொது மைய வாடியில் அடக்கம் செய்தார்கள்

(தபகாத் இப்னு ஸஅத், பாகம்: 8, பக்கம்: 115)

கேள்வி::3

நபி ஸல் அவர்களின் மகள் ஜைனப் ரலி அவர்கள் எத்தனாவது  வயதில் மரணித்தார்கள்..?

பதில்::

18 

பைஹகீ : 6834

கேள்வி::3

நபி ஸல் அவர்களின் பிள்ளைகள் 

காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர் தய்யிப்) ஆகியோர் எப்போது மரணித்தார்கள்::?

பதில்::

நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னரே மரணித்து விட்டனர்.

நூல் : அல் இஸாபா 5452

கேள்வி::5

நபி ஸல் அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்களின் தாய் யார்  அவர் பெயர் கூறுக:::?

பதில்::

இப்ராஹீம் என்ற ஆண் குழந்தையை அன்னை மாரியா (ரலி) அவர்கள் பெற்றெடுத்தார்கள்.

நூல் : ஸஃப்வத்துஸ் ஸஃப்வா, பாகம் : 1, பக்கம் 147

கேள்வி:::7'

நபி ஸல் மகன் இப்ராஹீம் அவர்கள் யார் அருகில் அடக்கம் செய்யப்பட்டது?

பதில்::

பகீஃ என்ற பொது மையவாடியில் நபியவர்களின் மற்ற பெண் பிள்ளைகள் அடக் கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

                        நூல்கள் : ஸஃப்வத்துஸ் ஸஃப்வா, பாகம் 1, பக்கம் 148,

கேள்வி:::9

அபூபக்ர் (ரலி) அவர்கள் எத்தனாவது வயதில் இறந்தார்கள்..?

பதில்::

பெரும்பாலான நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானும் அபூபக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம் என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்

புகாரி 3677

கேள்வி::10

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடத்தில் மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்::?

பதில்::

நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள்.

திர்மிதி (1913)

No comments:

Post a Comment