Wednesday, 14 December 2016

இஸ்லாமிய வினா விடைகள் 



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..

1 ) இஸ்லாத்தின் #ஐந்து கடமைகள் எவை ?

பதில் : 8. 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி
---=-=-------------
2 ) எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விடயங்களை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஐந்து விடயங்கள் யாது ?
பதில் : 335. 'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
Volume :1 Book :7
----------------

3 ) நபி ( ஸல் ) அவர்கள் விண்ணுலக பயணத்தின் போது ஐந்து நபிமார்களை கண்டார்கள் அந்த நபிமார்களின் பெயரை கூறுங்கள் ?

பதில் : ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். புகாரி 349
-----------------

4 ) ஐம்பது வேலை தொழுகையை .. ஐந்து வேளை தொழுகையாக குறைக்கும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று நபி ( ஸல் ) அவர்களிடம் கூறிய நபி யார் ?

பதில் : மூஸா நபி .. ஆதாரம் புகாரி 349

-------===-------

5 ) எந்த  ஐந்து நிலையில் உயிர் இழந்தவர்கள் ஷஹீத் என்ற அந்தஸ்தத்துடன் அழைக்கப்படுவார்கள் ?

பதில் : 653. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள்

-------------

6 ) எந்த ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது ?

பதில் : 1039. 'ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

--------------------

7 ) ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமிற்கு செய்ய வேண்டிய ஐந்து கடைமைகள் யாது ?

பதில் : 40. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

-----------=-------==

8 ) 'ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை யாது ?

826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!'

---------=-=-=--

9 ) நபி ( ஸல் ) அவர்களுக்கு அழகிய ஐந்து பெயர்கள் வழங்கப்பட்டது அவை யாது ?

பதில் : 3532. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹ்மத் - இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ - அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன். 
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

------------===-

10 ) மறுமை நாளின் அடையாளங்களில் 
ஐந்து

No comments:

Post a Comment