Saturday, 24 December 2016


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...

165 வது நாள் கேள்வி தொகுப்பு  : -

***********************************

1)  ( அல்லாஹ்வுக்கு ) இணை வைக்கும் பெண்களை திருமணம் செய்யலாமா  ???

பதில் : கூடாது . ஆதாரம் குர் ஆன்  2: 221

***********
2 ) பெண்ணின் மஹர் தொகை நிச்சயிக்கப் பட்டு  ( அப்  பெண்ணை தீண்டாமல்) தலாக் சொன்னால் மஹர் தொகை பெண்ணிற்கு கொடுக்கனுமா ???

பதில் . கொடுக்கணும்...ஆதாரம் குர் ஆன் . 2 : 237.பாதி அளவு

*************
3) கணவன் மனைவி முறையாக தலாக் சொல்லி பிரிந்துவிட்டால் கணவன் மனைவிக்கு கொடுத்தவற்றை  திருப்பி கேட்கலாமா ???

பதில் :  கூடாது.... ஆதாரம் குர் ஆன் 2 : 229
***************
4 )  கணவன் மனைவி எத்தனை முறை தலாக் சொல்லிவிட்டால் மீண்டும் சேரமுடியாது ???

1) 1 முறை
2) 2 முறை
3) 3 முறை
4) 4 முறை

பதில் : 3 முறை  ஆதாரம் குர் ஆன்  2:230
*************

5) மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்து  விலகி இருப்பவர்கள் எத்தனை மாதத்திற்குள் கூடி விடவேண்டும் ???

1) 2 மாதம்
2) 3 மாதம்
3)1 மாதம்
4 ) 4 மாதம்

பதில் : 4  மாதம்  ஆதாரம் குர் ஆன் 2:226
****************

6) தலாக் சொல்லப்பட்ட பெண் எத்தனை மாதவிடாய் ஆகும் வரை பொறுத்திருக்க வேண்டும் ???
1) 1 மாதவிடாய்
2) 2 மாதவிடாய்
3) 3 மாதவிடாய்
4) 4 மாதவிடாய்

பதில் : 3 மாதவிடாய். ஆதாரம் குர் ஆன் 2: 228

*****************

7) கணவன் இறந்து விட்டால் மனைவியர் எத்தனை நாள் (இத்தா ) பொறுத்து இருக்க வேண்டும் ???

1) 1 மாதம் 10 நாள்.
2) 2 மாதம் 10 நாள் 
3) 3 மாதம் 10 நாள்
4) 4 மாதம் 10 நாள்

பதில் : 4 மாதம் 10 நாள்  . ஆதாரம் குர் ஆன் 2: 234
******************
8 )  தலாக் சொல்லப்பட்ட மனைவியரின் பிள்ளைக்கு தந்தை விரும்பினால் பூரணமாக எத்தனை ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் ???

1)1 ஆண்டு
2)2 ஆண்டு
3)3 ஆண்டு
4)4 ஆண்டு

பதில் : 2 ஆண்டுகள் . ஆதாரம் குர் ஆன் 2 :233
********************

9 ) பெண்களின் மீது அவதூறு கூறுபவன் எத்தனை சாட்சிகளை கொண்டு வரவேண்டும் ?
1 ) 1
2) 2
3 ) 3
4 ) 4

பதில் : 4 ... ஆதாரம் குர் ஆன் 24 : 4
*****************
10 ) கற்புள்ள பெண்ணின் மீது அவதூறு கூறியவன் 4 சாட்சிகளை கொண்டு வராவிட்டால் எத்தனை கசையடி கொடுக்க வேண்டும் ???

1) 70
2) 80
3) 90
4) 60
பதில் : 80 கசையடி  ஆதாரம் குர் ஆன் 24 : 4

************************************************

No comments:

Post a Comment