Saturday, 24 December 2016


111வது வினா விடை கேல்வி பதில் தொகுப்பு

1) வினா 👉🏿✍🏻👈🏿

அடியாா்களின் மீது அல்லாஹ்விற்கு உள்ள"உரிமையும் அவா்களுக்கு அல்லாஹ் மீதுள்ள உரிமையும் என்ன?

1)விடை 👉🏿✍🏻👈🏿

 அல்லாஹ்வை வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது உரிமை அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்' என்று பதிலளித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7373

2)வினா 👉🏿✍🏻👈🏿

நபி(ஸல்) அவர்கள் யாரை  தம்முடன் அணைத்துக் கொண்டு, 'இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுப்பாயாக' என்றுசொன்னார்கள்.?

2விடை; 👉🏿✍🏻👈🏿
இப்னு அப்பாஸ் ரலி

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக் கொண்டு, 'இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுப்பாயாக' என்றுசொன்னார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7270

3)வினா 👉🏿✍🏻👈🏿
அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக்கைக் கொண்டு வந்த இருவரிடம்) 'உங்கள் இருவருக்குமிடையே நான் −−−−−−−−−−−−−−−−−− படியே தீா்ப்பளிப்பேன் என்று நபியவர்கள் சொன்னார்கள்

3)விடை; 👉🏿✍🏻👈🏿
அல்லாஹ்வின் சட்டப்படி

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக்கைக் கொண்டு வந்த இருவரிடம்) 'உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிப்பேன்' என்று நபியவர்கள் சொன்னார்கள்
பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7278-7279

4)கேள்வி 👉🏿✍🏻👈🏿

விரைவில் குழப்பம் தோன்றும் அப்போது அவற்றுக்கிடையே
------------------------விடவும்
--------------------------விடவும்
---------------------------விடவும்
சிறந்தவன் ஆவான்

4)விடை;👉🏿✍🏻👈🏿
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாம்) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 புகாரி ,பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7081

 5)கேள்வி 👉🏿✍🏻👈🏿
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா -----------முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள்.

5)விடை; 👉🏿✍🏻👈🏿
3

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
புகாரி.; பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7124

6)கேள்வி 👉🏿✍🏻👈🏿

தஜ்ஜாலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, 'அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனுடன் உள்ள நெருப்பு (உண்மையில்) --------------- அவனுடன் உள்ள நீர் (உண்மையில்)----------------- இருக்கும்' என்றார்கள்.

6)விடை; 👉🏿✍🏻👈🏿

குளிர்ந்த நீராகவும், நெ௫ப்பாகவும்

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

தஜ்ஜாலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, 'அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனுடன் உள்ள நெருப்பு (உண்மையில்) குளிர்ந்த நீராகவும், அவனுடன் உள்ள நீர் (உண்மையில்) நெருப்பாகவும் இருக்கும்' என்றார்கள்.63 அபூ மஸ்வூத்(ரலி) அவர்களும், 'நான் இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருக்கிறேன்' என்று கூறினார்கள்.
 புகாரி பாகம் 7, அத்தியாயம் 92, எண்7130

8) கேள்வி👉🏿✍🏻👈🏿

அல்லாஹ்வின் எந்த இர

No comments:

Post a Comment