Saturday, 24 December 2016
★93வது "வினா_விடை" கேள்வி பதில் தொகுப்பு ★★★
💐 السلام عليكم ورحمة الله وبركاته 💐♀♂
கேள்வி- பதில் தொகுப்பு.!
கேள்வி, 1
“துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமடைந்து) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப் புதுப்பிக்க அல்லாஹ்விடம் ___________ செய்து வாருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அ. திக்ரு
ஆ. துஆ
இ. பாவ மன்னிப்பு
சரியான பதில் :-
#துஆ
“துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமடைந்து) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப் புதுப்பிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்து வாருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( #ஹாகிம் )
கேள்வி, 2
“வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ____________ ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் எல்லாப் படைப்புகளின் விதிகளையும் எழுதிவிட்டான்.
அ. 50, 000
ஆ. 50, 0000
இ. 60,000
ஈ. 55,000
சரியான பதில் :-
“வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு #ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் எல்லாப் படைப்புகளின் விதிகளையும் எழுதிவிட்டான். அப்பொழுது அல்லாஹ் வின் அர்ஷ், நீரின் மீது இருந்தது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் )
கேள்வி, 3
யாரஸூலல்லாஹ்! திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலியும், வெகுமதியும் என்ன?'' என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், கேட்டதற்கு, திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலி ____________________! _________________!'' என பதிலளித்தார்கள்''
அ. சொர்க்கம்
ஆ. நற்ச்செயல்
இ. சிறந்தது
சரியான பதில் :-
#சொர்க்கம்
யாரஸூலல்லாஹ்! திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலியும், வெகுமதியும் என்ன?'' என்று நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம், கேட்டதற்கு, திக்ருடைய சபைகளில் அமர்வதின் கூலி சொர்க்கம்தான்! சொர்க்கம்தான்!'' என பதிலளித்தார்கள்'' என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள. (#அஹ்மத்_தப்ரானி )
கேள்வி, 4
எவர் _______________________என்று சொல்வாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அ. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி
ஆ. லா ஹவ்ல வ லா குவத இல்லா பில்லாஹ்
இ. லா இ லாஹ இல் அல்லாஹ்
சரியான பதில் :-
#சுப்ஹானல்லாஹி_வபிஹம்திஹி .!!!!
எவர் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று சொல்வாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ( பஸ்ஸார் )
கேள்வி, 5
துஆக்களில் சிறந்தது _____________நாளன்று கேட்கும் துஆவாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் .
அ. ஜும்ஆ
ஆ. அரஃபா
இ. தஹஜ்ஜீத்
ஈ. ஆஷுரா
சரியான பதில் :-
#அரஃபா
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளன்று கேட்கும் துஆவாகும். வார்த்தைகளில் சிறந்தது நானும் எனக்கு முன் சென்ற நபிமார்கள் (அலை) அவர்களும் சொன்ன ( لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ ) என்ற வார்த்தைகளாகும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( #திர்மிதி )
கேள்வி, 6
எவரது உள்ளத்தில் அணுவளவு ______________ இருக்குமோ அவர் சொர்க்கம் செல்லமாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அ. பொறாமை
ஆ. பெருமை
இ. கோபம்
சரியான பதில் :-
#பெருமை
எவரது உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்குமோ அவர் சொர்க்கம் செல்லமாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் )
கேள்வி, 7
செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் _____________வருடங்கள் முன்னதாக சுவர்க்கத்தில் நுழைவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அ. 50
ஆ. 40
இ. 60
ஈ. 70
சரியான பதில் :-
#நாற்பது_ஆண்டு
செல்வந்தர்களான முஸ்லிம்களைவிட ஏழை முஸ்லிம்கள் நாற்பது வருடங்கள் முன்னதாக சுவர்க்கத்தில் நுழைவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ( #திர்மிதீ )
கேள்வி, 8
புறம் பேசுவது __________________விட மிகக் கொடியது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியனார்கள் .
அ. கொலை
ஆ. விபச்சாரம்
இ. வட்டி
ஈ. திருட்டு
சரியான பதில் :-
#விபசாரத்தை_விட
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment