வினா விடை " கேள்வி பதில் " தொகுப்பு151
கேள்வி⛔01
அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தவர்கள் என்று அல்லாஹ் யாரை குறித்துக் கூருகின்றான்?
பதில்⛔01
வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக
மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம்.
குர்ஆன் 38:45,46
கேள்வி ⛔ 2
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது எனவே அவனிடம் உறுதியாக இருங்கள் அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள் இணை கற்பிப்போருக்குக் கேடுதான் இருக்கிறது என்று அல்லாஹ் யாரிடம் கூறச் சொல்கிறான்?
பதில் ⛔ 2
என்று (முஹம்மதே!) கூறுவீராக!
குர்ஆன் 41:6
கேள்வி ⛔ 3
பூமியை எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது?
பதில் ⛔ 3
பூமியை இரண்டு நாட்களில் படைத்தான்
குர்ஆன் 41:9
கேள்வி ⛔ 4
பூமியின் மேலே முளைகளை எத்தனை நாட்களில் ஏற்படுத்தினான்?
பதில் ⛔4
நான்கு நாட்களில்
குர்ஆன் 41:10
கேள்வி ⛔5
••••நிரப்புக
••••••••••••••••••• நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம
பதில்⛔5
விரும்பியோ, விரும்பாமலோ
குர்ஆன் 41:11
கேள்வி ⛔6
ஏழு வானங்களை எத்தனை நாட்களில் அமைத்தான்.?
பதில்⛔6
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.
குர்ஆன் 41:12
கேள்வி ⛔7
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ என்பதன் பொருள்??
பதில் ⛔7
அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
குர்ஆன் 55:68
கேள்வி ⛔8
விசாரணை நாளில் வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் எவ்வாறு இருப்பார்கள்?
பதில் ⛔8
அவர் திருப்தியான சுக வாழ்க்கையில்
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனிவகைகள் கைக்கு எட்டியதாக சமீபத்திலிருக்கும்.
69:21,22,23
கேள்வி ⛔9
பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமே ஆனால் அவன் என்ன கூருவான்?
பதில்⛔9
என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே என்று கூருவான்
(அல்குர்ஆன் : 69:25)
கேள்வி ⛔ 10
குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் அதைப் புசித்திருக்க மாட்டார்! அது என்ன உணவு?
பதில்⛔10
சீழ் நீரைத் தவிர அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை
(அல்குர்ஆன் : 69:36)
♨💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢♨
No comments:
Post a Comment