Saturday, 24 December 2016


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ★

#இஸ்லாமிய_கேள்வி_பதில்_தொகுப்பு_150வது

💜 #கேள்வி:::1⃣
அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

💙 #பதில்:::👇🏻👇🏻👇🏻

 ‘#ஆரோக்கியம்_ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
 #புகாரி_6412)

💜 #கேள்வி:::2⃣👇🏻👇🏻

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் வந்து, சொர்க்கத்தையும் நரகத்தையும் கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் கூறினார்கள். ??

💙 #பதில்::👇🏻👇🏻👇🏻

யார் அல்லாஹ்வுக்கு எதையும் #இணை_வைக்காமல_இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு #இணை_வைத்தவராக_இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (151)

💜 #கேள்வி::3⃣👇🏻👇🏻

அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது:::??

💙 #பதில்::👇🏻👇🏻👇🏻

அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புஹாரி (4761)

💙 #கேள்வி::4⃣👇🏻👇🏻

எந்த கிழமை அன்று அல்லாஹ் தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்.??

💙 #பதில்::👇🏻👇🏻👇🏻

ஒவ்வொரு #வியாழக்கிழமையும்_திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப் படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்

முஸ்லிம் (5014)

💙 #கேள்வி:::5⃣👇🏻👇🏻

 தாயின் வயிற்றுக்குள் எத்தனை இருள்களில் வைத்து குழந்தை படைக்கப்படுகின்றது::??

💙#பதில்:::👇🏻👇🏻👇🏻

#மூன்று 

அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கின்றான்.) அன்றி, (உங்களுடைய நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கின்றான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக #மூன்று_இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கின்றான். இந்த அல்லாஹ்வே உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?
(அல்குர்ஆன் : 39:6) 

💜 #கேள்வி::6⃣👇🏻👇🏻

நரகத்தின் வாசல்கள் எத்தனை::??

💜 #பதில்::👇🏻👇🏻👇🏻

 #ஏழு

இப்லீஸைப் பின்பற்றுவோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 15:44)

💜 #கேள்வி::7⃣👇🏻👇🏻

அனைத்து நபிமார்களின் மனைவிகளுக்கும் சொர்க்கம் உண்டா::??

💜 #பதில்:👇🏻👇🏻

#இல்லை 

நூஹ் உடைய மனைவியையும் லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். எனினும், அவ்விரு வரும் தத்தம் கணவருக்கு துரோகம் செய்தனர். பிறகு, அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க இயலவில்லை (அவ்விருவரையும் நோக்கிக்) கூறப்பட்டது: “நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்.”
(அல்குர்ஆன் : 66:10)

💜  #கேள்வி::8⃣👇🏻👇🏻

செய்யாத ஒன்றிற்கு பழி சுமத்தப்பட்ட மிருகம் எது?

1⃣யானை
2⃣நாய்
3⃣ஓநாய்
4⃣பசுமாடு

💙 #பதில்::👇🏻👇🏻👇🏻

#ஓநாய்

எங்கள் தந்தையே! நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தோம். யூஸுஃபை எங்கள் பொருட்களின் அருகில் விட்டிருந்தோம். திடீரென்று ஓநாய் வந்து அவரைத் தின்றுவிட்டது; (இப்போது) நாங்கள் உண்மை சொல்பவர்களாய் இருந்தாலும் எங்களை நீங்கள் நம்பமாட்டீர்கள்.”
(அல்குர்ஆன் : 12:17)

💜 #கேள்வி:::9⃣👇🏻👇🏻

ஓவ்வொரு இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்திற்காக 
பிரார்த்திக்க அங்கீகரிக்கப் பட்ட பிராத்தனை வழங்கப் பட்டுள்ளது.  எனக்கு வழங்கப் பட்ட பிரார்த்தனையை இதற்காக வழங்க  விரும்புகிறேன் என (யாருக்காக, எத்தகைய வாழ்விற்காக )  இறைத் தூதர் முகமது (ஸல்) கூறினார்கள் ?

💜 #பதில்:::எனக்கு வழங்கப் பட்ட பிரார்த்தனையை #மறுமையில்_என்_சமுதாயத்தாருக்குப்_பரிந்துரை_செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என கூறினார்கள். 

ஆதாரம் :  👉  நூல் ஸஹீஹ் புகாரீ எண்: 6304

💜 #கேள்வி::1⃣0⃣👇🏻

 பெருநாள் தொழ

No comments:

Post a Comment