Saturday, 24 December 2016


123வது "வினா விடை " கேள்வி பதில் " தொகுப்பு

بسم الله الرحمن الرحيم○♤

#கேள்வி ::1

நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் ______ _______ _______ காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்…?

பதில் 🎈🎈

#பெரும்_சப்தம்_தாக்கியது.

  11:94

=======

#கேள்வி  2

கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் ______  _____ ______இருக்கும்...?

பதில் 🎈🎈

கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.

திருக்குர்ஆன்  11:106

=======

#கேள்வி 3

(ஸா)தாரிக் என்பது என்ன..?

=======

பதில்🎈🎈

النَّجْمُ الثَّاقِبُ

3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.

திருக்குர்ஆன்  86:3

=======

#கேள்வி 4

அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் ___ ____ …?

பதில் 🎈🎈

கேடு தான்!

திருக்குர்ஆன்  83:1

=======

#கேள்வி 5

இணை கற்பிக்கும் பாவத்தில் சிறய வகை என்பது யாது?

பதில்,.👇

ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென்பதற்காகச் செய்யும் இணை வைத்தலின் சிறிய வகையையே நான் உங்கள் வியத்தில் மிக அதிகமாக அஞ்சுகிறேன்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் எச்சரிக்கிறார்கள்.

நூல் : அஹ்மத்  22523

=======

#கேள்வி:: 6

உஹுத் போரில் அன்சாரிகளில்
 நபித்தோழர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்::?

பதில்::🎈

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரில் அன்சாரிகüல் எழுபது பேர் கொல்லப்பட்டனர்.

நூல் : புகாரி (4078)

======

#கேள்வி:: 7

காணாத கனவைக் கண்டதாக கூறுபவருக்குரிய மறுமையில் தண்டனை என்ன..?

பதில்::🎈🎈

ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒரு போதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.). . .  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 7042

=======

#கேள்வி:: 8

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது --- -----::?

பதில்::🎈

#நல்ல_மனைவியே

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் 2911

=======

#கேள்வி 9

அற்பமானதையும் கொடுக்க மறுக்கின்றவர் யார்..?

பதில்:🎈🎈

4, 5. #தமது_தொழுகையில் #கவனமற்று #தொழுவோருக்குக்_கேடு தான்

திருக்குர்ஆன்  107:5

6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.

திருக்குர்ஆன்  107:6

7. அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.

திருக்குர்ஆன்  107:7

=======

#கேள்வி 10

#மாவூன் என்றால் என்ன..?

பதில்:🎈🎈

அற்பப் பொருள்.

الحمد لله رب العالمين

No comments:

Post a Comment