Saturday, 31 December 2016
இஸ்லாமிய வினா விடை
கேள்வி--»❓1
இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?
பதில்--»✔ 1
#தொழுகையை_விடுவது
இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு,
(நூல்: முஸ்லிம் 116)
கேள்வி--»❓2
யாருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை?
பதில் =>2
#அல்லாஹ்வை_நம்பிக்கை_கொண்டோருக்கு
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)
கேள்வி--»❓3
தொழுகை இதில் இருந்து நம்மை தடுக்கும்?
பதில்=>✔ 3
#வெட்கக்கேடான_காரியங்களை_விட்டும்_தீமையை_விட்டும்
(முஹம்மதே!) வேதத்திருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
கேள்வி=>❓4
யாருக்கு தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 4
#சூரத்துல்_ஃபாத்திஹா_ஓதாதவருக்கு
''சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபாதா (ரலி)
(நூல் : புகாரீ 756)
கேள்வி=>❓5
யாருக்கு தொழுகை செல்லாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 5
#ருகூ_சஜ்தாஹ்வை_பேணாதவர்கள்
ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி
(நூல் : திர்மிதீ 245)
கேள்வி=>❓6
திருடர்களில் மிகவும் மோசமான திருடன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 6
#தொழுகையில்_திருடுபவன்
''திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ''அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். ''தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
(நூல்: அஹ்மத் 11106)
கேள்வி=>❓7
ருகூவில் இருந்து எழுந்துவிட்டு சஜ்தாஹ் செய்யும் முறை எவ்வாறு இருக்கவேண்டும்?
பதில்=>✔ 7
#ஒட்டகம்_அமர்வது_போல்_அமர_வேண்டாம்
''உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: நஸயீ 1079)
கேள்வி=>❓8
தொழுகையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியான இடம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்=>✔ 8
#ஸஜ்தாவில்
ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(நூல் : முஸ்லிம் 824)
கேள்வி=>❓9
ஸகர் என்ற நரகம் யாருக்காக அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கிறான்?
பதில்=>✔ 9
#தொழுகையாளிகளாக_இல்லாதவருக்கு
"குற்றவாளிகளிடம் உங்களை ("ஸகர்" எனும்) நரகில் நுழைவித்தது எது? எனக் கேட்பார்கள்." "அதற்கவர்கள் நாம் தொழுகையாளிகளில் இருக்க வில்லை", "மேலும் "ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்க வில்லை, எனக் கூறுவார்கள்." "இன்னும் நாம் (வீணானவற்றில்) மூழ்கியிருந்தோருடன் மூழ்கி இருந்தோம்".
(அல்குர்ஆன் 74: 41, 42, 43, 44,45)
கேள்வி=>❓10
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
பதில்=>✔ 10
#சரியாக_தொழுகையை_பேணுபவர்கள்
அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.இத்தகையோர் தாம் சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
(அல் குர்ஆன் 23:9,10)
🍇Rosana binth abbas🍇
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment