Saturday, 24 December 2016


கேள்வி 🔒1 இறந்தவர் சார்பாக தர்மம் செய்தால் அதன் நன்மை இறந்தவருக்கு கிடைக்குமா?
பதில் 🗝 
ஆம் சேரும்
ஆதாரம்:📕புகாரி 1388
********************************************
கேள்வி 2🔒
இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?
பதில் 🗝
ஆம் நிறைவேற்றலாம்.
ஆதாரம் 📕புகாரி 1852

**********************************************
கேள்வி 3🔒
இறந்தவரின் உடலை கிப்லா திசை நோக்கி தான் வைக்க வேண்டுமா?
பதில் 🗝
கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டும் என்று வருகின்ற ஹதீஸ் அனைத்தும் பலஹீனமான செய்திகள் எனவே
உடலை நமது வசதிக்கு ஏற்ப எந்த பக்கம் வேண்டுமானாலும் வைக்கலாம்

**********************************************
கேள்வி 4🔒
சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாய கடமையா?
பதில்🔑
கட்டாயக் கடமை இல்லை 
ஆதாரம் 📖 அபூதாவூத் 2772

 நபி ஸல் அவர்கள் தமது மகன் இப்ராஹீம் 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்த வில்லை

***********************************************
கேள்வி 5🔒
கஃபனிடுதல் என்றால் என்ன?
பதில் 🗝
குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும் இதை தான் #கஃபன் என்று மார்க்கம் கூறுகீறது,

இதை தவிர்த்து 
சட்டை,உள்ளாடை,வேட்டி ,மேல்சட்டை பின்னர் உடலை மறைக்கும் துணி இப்படி இருந்தால் தான் அது கஃபன் என்று இல்லை,#கஃபன் இடுவதற்கு இப்படி எல்லாம் கட்டுபாடுகள் ஏதுமில்லை

**********************************************
கேள்வி 6🔒
தைக்கப்பட்ட ஆடையில்  கஃபன் இடலாமா?
பதில் 🗝
ஆம் இடாலாம்
ஆதாரம் 📕புகாரி 1269

*******************************************
கேள்வி 7🔒
நமது கஃபனை நாமே தயார் செய்து கொள்ளலாமா?
பதில் 🗝
தயார் செயலாம்
ஆதாரம் 📕புகாரி 1378

*******************************************
கேள்வி 🔒8
ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாமா?
பதில் 🔑
ஆம் தொழலாம்
ஆதாரம் ஹாகிம் 1/519

**********************************************
கேள்வி 9🔒
ஜனாஸா தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?
பதில் 🗝
கலந்து கொள்ளலாம்
ஆதாரம் 📕புகாரி ஹாகிம் 1/519

******************************************
கேள்வி 10🔒🔒🔒
இறந்தவர் ஆணாக இருந்தால் அல்லது பெண்ணாக இருந்தால் #இமாம் எங்கு நிற்க வேண்டும் ???
பதில் 🗝🗝🗝
 ஆணாக இருந்தால் உடலை குறுக்கு வசமாக வைத்து #தலைக்கு நேரகாவும்

 பெண்ணாக இருந்தால் அவரது #வயிற்றுக்கு நேராகவும் இமாம் நிற்க வேண்டும் 
📕புகாரி 332
📗திர்மிதி 955

No comments:

Post a Comment