Saturday, 24 December 2016
இஸ்லாம் வினா விடை கேள்வி பதில் தொகுப்பு
❤ #بسم_الله_الرحمن_الرحيم ❤
🌷 السلام عليكم ورحمة الله وبركاته 🌷
கேள்வி, 1
உஹூத் போர் எப்போது நடைப் பெற்றது ?
சரியான பதில் :-
فتح الباري - ابن حجر - (3 / 211) وكانت أحد في شوال سنة ثلاث
உஹுத் போர் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்தது.
(ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம்:3, பக்கம் :211)
கேள்வி, 2
உஹுத் போர் நடந்த இடம் எங்கே ?
சரியான பதில் ;-
மதீனாவிலிருந்து சுமார் 3 மைலுக்கு குறைவான தூரத்தில் உள்ள உஹுத் மலைப்பகுதியில் நடந்தது
( பத்ஹுல் பாரி , பாகம் : 7 , பக்கம் : 346 )
கேள்வி, 3
உஹுத் போரில் இணைவைப்பாளர்களில் எத்தனைப் பேர் இருந்தார்கள் ?
சரியான பதில் :-
#3000 #மூவாயிரம்_நபர்கள் .
( பத்ஹுல் பாரி , பா: 7 , பக் : 346 )
கேள்வி, 4
உஹுத் போரில் முஸ்லிம்களில் எத்தனை நபர்கள் களந்துக் கொண்டனர் ?
சரியான பதில் :-
#700 #எழுநூறு_நபர்கள்
( பத்ஹுல் பாரி , பா: 7, பக் , 346 )
கேள்வி , 5
இணைவைப்பவர்கள் மதீனாவை நோக்கி படையெடுத்து வருவதை அறிந்த நபிகளார் அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தனர். அதில் அவர்களது தோழர்கள் என்ன கருத்தைக் கூறினார்கள் ?
சரியான பதில் :-
இணைவைப்பவர்கள் மதீனாவை நோக்கி படையெடுத்து வருவதை அறிந்த நபிகளார் அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தனர்.
#பெரும்பாம்மையினர், எதிரிகளை களத்தில் சந்திக்க வேண்டும் என்றே கூறினர் .
( பத்ஹுல் பாரி , பா; 7, பக் ; 346 )
கேள்வி, 6
உஹுத் போரைப் பற்றி அல்லாஹ் சுப் ஹான வத ஆலா நபி ஸல் அவர்களுக்கு முன் கூட்டியே கனவின் மூலம் அறிவித்துக் கொடுத்த செய்தி என்ன ?
சரியான பதில் :-
3622. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி “யமாமா“வாகவோ “ஹஜரா“கவோ தான் இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால், அது யஸ்ரிப் - மதீனாவாகிவிட்டது. மேலும், இந்த என்னுடைய கனவில் நான் (என்னுடைய) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டி) அழகாகியது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்ததாகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக் கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்
கேள்வி , 7
நபி ஸல் மதினாவில் இருந்து கிளம்பும் போது எத்தனை நபர்களுடன் கிளம்பினார்கள் ?
மேலும் அவர்கள் உஹதை அடைந்த போது எத்தனை நபர்களாக இருந்தார்கள் ?
சரியான பதில் :-
நபி ஸல் #1000 நபர்களுடன் போருக்கு புறப்பட்டார்கள் அனால் வழியில் #300 நபர்கள் மனம் மாறி திரும்பிவிட்டார்கள் . ஆக #700 நபர்களே உஹதில் களந்துக் கொண்டார்கள் .
( பத்ஹுல் பாரி ,பா: 7, பக் : 346 )
கேள்வி, 8
அந்த 300 நபர்களின் மனதை மாற்றி அழைத்துச் சென்றவன் யார் ?
சரியான பதில் :-
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் என்பவன்
( பத்ஹுல் பாரி . பா: 7, பக் : 346 )
கேள்வி, 9
திரும்பிச் சென்ற அந்த #300 நபர்களை என்ன செய்வது என்றி அவர்களுக்கும் பேசலானார்கள் அதில் ஒரு கூட்டம் அவர்களை கொல்ல வேண்டும் என்றும் மற்றொறு கூட்டம் அவர்களை கொல்லக் கூடாது என்றும் பேசலானார்கள்.
இதைக் குறித்து அல்லாஹ் சுப் ஹான வத ஆலா இறக்கிய வசனம் என்ன ?
சரியான பதில் :-
4050. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப்போருக்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி(ஸல்)அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்களின் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்னும் விஷயத்தில்) நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் இரண்டு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவினர், “(திரும்பி ஓடியவர்களைக்) கொன்று விடுவோம்” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “அவர்களை நாம் கொலை செய்யக் கூடாது” என்று கூறினர். (அவர்கள் கருத்து வேறுபட்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் அருளப்பட்டது.
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்
Subscribe to:
Post Comments (Atom)
உஹத் போரில் சுவனத்தின் வாசனையை உணர்ந்த ஸஹாபி ?Who know this answr
ReplyDeleteஸஹத் இப்னு ரஃப்பி ரலி
Deleteஅனஸ் இப்னு நழ்ர் ரழியல்லாஹு அன்ஹு
ReplyDeleteஉஹதுப்போரில் பெருமானாரது பாதுகாப்பிற்காகப் போராடிய நாயத்தோழரின் கைகள் சல்லடையாக்கப்பட்டன. அவர் யார்?
ReplyDelete4:உஹது யுத்தத்தில் கால்கள் ஊனமான நிலையில் கலந்து கொண்ட ஸஹாபி யார்?
ReplyDelete. 1 உஹது போரின் போது அம்பெய்யும் வீரர்களுக்கு யார் தலைவராக இருந்தார்கள்?
ReplyDeleteHamsha rali
Delete
ReplyDeleteB) உஹது போரில் நபி (ஸல்) அவர்களை நோக்கி எதிரிகள் வீசிய அம்புகளை, தன்னுடைய கைகளால் தடுத்து, நபி (ஸல்) அவர்களை பாதுகாத்த நபி தோழர் யார்
உஹது போரின் ராஜாளி என அழைக்க பட்டவர் யார்?
ReplyDelete