Saturday, 24 December 2016
அஸ்ஸலாமுஅலைக்கும்
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ
#கேள்வி_பதில்_தொகுப்பு_186து
கேள்வி:::1
ஹதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் சகோதரி பெயர் என்ன.?
பதில்::
ஹாலா (هالة)
ஆதாரம் புகாரி (3821)
கேள்வி::2
யாரை விசாரித்துக் கொண்டிருப்பவர் திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்..?
பதில்:::
நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்
முஸ்லிம் (5017)
கேள்வி:::3
யார் சொர்க்கத்தின் குர்ஃபா வில் இருக்கிறார்..?
பதில்::
நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் "குர்ஃபா'வில் இருக்கிறார்
குர்ஃபா' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதன் கனிகளைப் பறிப்பதாகும்'' என்று பதிலளித்தார்கள்.
5020
கேள்வி::4
நோயாக ஒருவர் நபி (ஸல்)
அவர்களிடம் கொண்டுவரப்பட்டால் அவர்களுக்காக எவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள் ..?
ஒரு வரி கூறினால் போதும்
பதில்::
அத்ஹிபில் பஃஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்'' என்று பிரார்த்திப்பார்கள்.
பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமüப்பாயாக. நீயே குணமüப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5675)
கேள்வி::5
யாரை அல்லாஹ் நரகத்தில் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான் ..?
பதில்::
யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ் சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான்
அபூதாவூத் (3123)
கேள்வி::6
மனிதனுக்கு செய்யும் பாவங்களில் தண்டனைகளிலே மிகப்பெரியது எது.?
பதில்::
ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமை இல்லாமல் வரம்பு மீறுவதுதான்
அபூதாவூத் (4233)
கேள்வி::7
எவன் மக்கள் பணத்தை அல்லது பொருட்களைத் திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக
யார் அதனைத் திருப்பிச் செலுத்துவான்.?
அ- (அல்லாஹ் )
ஆ- (வானவர்கள்)
பதில்::
அல்லாஹ்
எவன் மக்கன் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்.
இப்னுமாஜா (2402), அஹ்மத் (8378)
கேள்வி::8
எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை ஏமாற்றி அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை ::?
Culu இந்த கேள்விளே விடை உள்ளது
பதில்::
எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூற்கள்: புகாரி (2387), இப்னுமாஜா (2402), அஹ்மத் (8378)
கேள்வி::9
எந்த நிகழ்ச்சியை அப்வா போர் என்று கூறப்படுகிறது..?
பதில்::
மதீனா வந்த 12வது மாதத்தில் ஸஃபரில் மக்காவிற்கு மதீனாவிற்கு இடையில் உள்ள அப்வா என்ற இடத்திற்கு, குறைஷி வணிகக் குழுவை தாக்கச் சென்றார்கள். ஆனால் போர் நடக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்குத் தான் அப்வா போர் என்று கூறப்படுகிறது. (பத்ஹுல் பாரி, பாகம்: 7, பக்கம்: 279)
கேள்வி::10
எந்த நிகழ்ச்சியை புவாத் போர் என்று கூறப்படுகிறது..?
பதில்:::
ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் குறைஷி வணிகக் குழுவைத் தாக்க புவாத் என்ற மலைக்குச் சென்றார்கள். அப்போதும் போர் நடக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு புவாத் போர் என்று கூறப்படுகிறது. (பத்ஹுல் பாரி, பாகம்: 7, பக்கம்: 279)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment