Saturday, 24 December 2016


142வது  #கேள்வி_பதில்_தொகுப்பு 

கேள்வி 1.
பத்ர் போரில் கொல்லபட்ட ஒருவரின் தாய் நபியிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னிடம் (இவருக்கு) ____ உள்ள அந்தஸ்தை அறிந்திருக்கிறீர் அவர் சுவர்கத்தில் இருந்தால் நன்மையை நாடி பொறுமை காப்பேன் என கூறினார்?
(இவரின் மகன் யார்?)

பதில் 1.
🍎🍎 ஹாரிஸா இப்னு ஸுராகா🍎🍎

புஹாரி
3982

கேள்வி: 2
நபி (ஸல்) அவர்கள் : சுவர்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன் என யாரிடம் கூறினார்???

பதில் 2
🍎🍎 பிலால் (ரலி)🍎🍎

புஹாரி
1149

கேள்வி: 3
நபி (ஸல்) அவர்கள் : நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்ல, மாறாக சொர்க்கவாசிகளில் ஒருவரே
என்று சொல் என யாருக்கு செல்ல சொன்னார்????

பதில் : 3

🍎🍎 ஸாபித் இப்னு கைஸ்🍎🍎

புஹாரி
3613

கேள்வி: 4

நபி (ஸல்) அவர்கள் :
என் சமூகத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட சுவனத்தில் நுழைவார்கள் என்று கூறியதும் ஒருவர் எழுந்து அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி பிரார்த்தனை செய்ய சொன்னது யார்?????

பதில்: 4

🍎🍎 உ(க்)காஷா🍎🍎

புஹாரி 
5811
கேள்வி: 5
நபி (ஸல்) அவர்கள் :
பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும் இவர் சொர்க்கவாசி என்று சொல்லி நான் கேட்டதில்லை
யாரை தவிர?????

பதில்: 5

🍎🍎 அப்துல்லாஹ் இப்னு ஸலாம்🍎🍎

புஹாரி.
3812

கேள்வி: 6
.நபி (ஸல்) அவர்கள் : 
வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சுவர்க்கத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியதும் ஆஹா ஆஹா என கூறியது யார்????

பதில் : 6

🍎🍎 உமைர் (ரலி)🍎🍎

முஸ்லிம்
3858

கேள்வி: 7
நபி (ஸல்) அவர்கள் :
(சிரியாவுக்கு புறபட்டு சென்ற) அபூ ஸூப்யானின் வணிக குழு என்ன ஆயிற்று என கண்டறிய யாரை உளவாளியாக அனுப்பினார்கள் ????

பதில்: 7

🍎🍎 புசைசா இப்னு அம்ர் அல் அன்ஸாரீ🍎🍎

முஸ்லிம்

3858

கேள்வி: 8
நபி (ஸல்) அவர்கள் :
நான் (கனவில்) என்னை சுவனத்தில் நுழைந்தவனாக கண்டேன் அங்கு நான் , _____ அவர்களுக்கு அருகே இருந்தேன் என்று கூறினார். அது யார் ????

பதில் : 8

🍎🍎ருமைஸா (உம்மு ஸுலைம்🍎🍎

புஹாரி
3679

கேள்வி: 9
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் "சுவனவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்கு காட்டட்டுமா? என கேட்க நான் ஆம் என்றேன். இந்த கறுப்பு நிற பெண் என கூறினார். அப்பெண் யார்? ???

பதில் : 9

🍎🍎 உம்மு ஸுபைர்🍎🍎

புஹாரி
5652

கேள்வி: 10

(அஷ்ரதுல் முபஷ்ஷரா) 
சுவனம் செல்பவர்கள் என்று நற்செய்தி கூறபட்டவர்கள் யார் யார்?
(ஐந்து பெயர்களை கூறவும்)

பதில்: 10

🍎🍎 அபூ பக்ர்
உமர்
உஸ்மான்
அலீ
தல்ஹா
ஸீ பைர்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
ஸஅத் இப்னு அபீவக்காஸ்
ஸயீத் இப்னு ஸைத்
அபூ உபைதா இப்னு அல்ஜர் ராஹ்🍎🍎

திர்மிதி: 3680
அபூதாவூத் : 4031
இப்னுமாஜா: 130

No comments:

Post a Comment