Saturday, 24 December 2016
121வது " வினா விடை " "கேள்வி பதில் " தொகுப்பு
#1கேள்வி:
நபி (ஸல்) அவர்களுக்கு யார், யார் மூலம் குழந்தை பிறந்தது?
#1பதில்:
அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி)
(ஆதாரம்: புகாரீ 3818, 1303, தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 132)
#2கேள்வி:
நபி (ஸல்) அவர்களது குழந்தை எத்தனை வயதில் இறந்தது?
#2பதில்:
16 மாதம்
(ஆதாரம்: அபூதாவூத் 2772)
#3கேள்வி:
நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?
#3பதில்:
அப்துல்லாஹ்
(ஆதாரம்: புகாரீ 2700 )
#4கேள்வி:
நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்கள் ஆண்கள் எத்தனை பேர்?
#4பதில்:
1. ஹாரிஸ்
2. ஸுபைர்
3.அபூதாலிப் 4.அப்துல்லாஹ்
5. ஹம்ஸா (ரலி)
6. அபூலஹப்
7.கைதாக்
8. முகவ்விம்
9. ஸிஃபார்
10. அப்பாஸ் (ரலி) ஆகிய பத்து நபர்களாகும்.
(ஆதாரம்: இப்னு ஹிஷாம்)
#5கேள்வி:
இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
#5பதில்:
ஹம்ஸா (ரலி), அப்பாஸ் (ரலி)
(ஆதாரம்:அல்இஸ்தீஆப்)
#6கேள்வி:
நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?
#6பதில்:
1. ஸஃபிய்யா (ரலி),
2. ஆத்திகா,
3. அர்வா,
4. உமைய்யா,
5. பர்ரா,
6. உம்மு ஹகீம் ஆகிய ஆறு நபர்கள்.
(ஆதாரம்: மஸாயிலு இமாம் அஹ்மத்)
#7கேள்வி:
இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
#7பதில்:
ஸஃபிய்யா (ரலி), மற்றவர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)
#8கேள்வி:
நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?
#8பதில்:
நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்.
(ஆதாரம்: இஸ்தீஆப்)
#9கேள்வி:
அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு?
#9பதில்:
நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்கள்
(ஆதாரம்: புகாரீ 441)
#10கேள்வி:
ஜைனப் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
#10பதில்:
அபுல் ஆஸ் பின் ரபீவு
(ஆதாரம்: திர்மிதீ 1062)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment