Saturday, 24 December 2016


126வது இஸ்லாமிய வினா விடை " "கேள்வி பதில் " தொகுப்பு

கேள்வி: 1 : 
நான்கு பாக்கியங்களும் எவருக்கு கொடுக்கப்பட்டதோ அவர் இம்மை மறுமையின் நன்மைகள் பெற்று   கொண்டார் என நபி (ஸல்) கூறினார்? அதில் இரண்டை கூறவும்?

பதில் :
நன்றி செலுத்தும் உள்ளம், அல்லாஹ்வை தியானிக்கும் நாவு, துன்பங்களைச் சகிக்கும் உடல், தன் கற்பிலும் கணவனின் செல்வத்திலும் மோசடி செய்யாத பத்தினியான மனைவி ஆகிய இந்த நான்கு பாக்கியங்களும் எவருக்குக் கொடுக்கப்பட்டதோ, அவர் இம்மை, மறுமையின் நன்மைகள் யாவற்றையும் பெற்றுக் கொண்டார்'', என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தப்ரானி

கேள்வி : 2  
எத்தனை வானங்கள் உள்ளன?

பதில் :

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

குர்ஆன்  2:29

கேள்வி : 3
மூஃமின்களை அல்லாஹ் எவ்வாறு சோதிப்பான்?

பதில்:

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன்  2:155

கேள்வி: 4
தேனிக்கள்  எங்கே தமக்கென வீடுகளை கட்டுகின்றன?

பதில் :

 "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! 

திருக்குர்ஆன்  16:69

கேள்வி: 5
குகைவாசிகள்  எவ்வளவு காலம் குகையில் தங்கினார்கள்?

பதில்:
அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.)

திருக்குர்ஆன்  18:25

கேள்வி: 6
மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன?

பதில்:
 உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.

திருக்குர்ஆன்  22:47

கேள்வி: 7
மூஸாவின் தாயாருக்கு அல்லாஹ் சொன்ன விஷயம் என்ன?

பதில் :

 "இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

திருக்குர்ஆன்  28:7

கேள்வி: 8
சுலைமான் நபிக்கு அல்லாஹ் கொடுத்த சோதனை எவ்வாறு இருந்தது?

பதில் :
ஸுலைமானை நாம் சோதித்தோம்.அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார்.

திருக்குர்ஆன்  38:34

கேள்வி: 9
குழப்பம் செய்தால் உலகில்  கொடுக்கும்  கடும் தண்டனை என்ன என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

பதில் :

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன்  5:33

கேள்வி : 10
தச்சு தொழில் செய்து தன் குடும்பத்தை வழி நடத்திய நபி யார்?

பதில் :

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சுத் தொழில் செய்பவராக இருந்தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

முஸ்லிம் 4741

3 comments:

  1. .இவ்வுலகின் இனிமை மறுமையின் கசப்பாகும். இவ்வுலகின் கசப்பு மறுமையின் இனிப்பாகும். என அண்ணலார் கூறியதாக மரணம் அண்மித்த போது கூறிய ஷஹாபி யார்?*

    ReplyDelete
  2. மறுமை நாள் நெருங்கும் சமயம் எல்லோரும் எந்த வக்து தொழுகையை எதிர்பார்தவர்களாக எந்த இடத்தில் இருப்பார்கள்??

    ReplyDelete