Monday, 12 December 2016


இஸ்லாமிய வினா விடை தொகுப்பு 


கேள்வி 1. ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது திருப்திவுடன் இருக்கின்றாரா அல்லது கோபத்துடன் இருக்கின்றாரா என்பதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் எப்படி அறிந்துகொள்வேன் என கூறினார்கள்?
பதில் . ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது திருப்திவுடன் இருக்கும் போது பேசினால், முஹம்மதுடைய அதிபதியின் மீது சத்தியமாக! என்று கூறுவார்கள். நபியின் மீது கோபமாய் இருக்கும் போது பேசினால், இப்ராஹிம் (அலை) அவர்களின் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று கூறுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி)

கேள்வி 2. மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக, அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை என்னென்ன? 
பதில் : (1)பொருளாசை (2)நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல்: புகாரி).

கேள்வி 3. .நபி (ஸல்) அவர்கள் எந்த மூன்று விஷயங்கள் குறித்து அபூஹூரைரா (ரலி) அவர்களிடம் வலியுறித்தினார்கள். அவற்றை தாம்மரணிக்கும் வரை விடவேமாட்டேன் என அபூஹூரைரா (ரலி) கூறினார்கள்?
பதில் : (1)ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்றல் (2)ளுஹா தொழுகை தொழுதல் (3) வித்ரு தொழுதுவிட்டு உறங்குதல். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: புகாரி).

கேள்வி 4. உயிர்த் தியாகிகள் ஐந்து பேர் ஆவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த ஐவர் யார், யார்?
பதில் : (1) பிளேக் (கொள்ளை) நோயால் இறந்தவர். (2) வயிற்று(ப்போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர். (3) தண்ணீரின் மூழ்கி இறந்தவர். (4) (வீடு, கட்டடம் ஆகியவை இடிந்து விழும்போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர். (5) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
கேள்வி 5. மறுமை நாளில் பார்க்கும் கண்களும், கேட்கும் செவியும், பேசும் நாவும் கொண்ட நரகத்தின் ஒரு பகுதி கிளம்பி, எந்த மூன்று பேரின் மீது நான் சாட்டப்பட்டுள்ளேன் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? 
பதில் : (1) வரம்பு மீறி முரண்டு பிடித்தவன். (2) அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளிடம் பிரார்த்தித்தவன். (3) உருவங்களை வரைந்தவன். (அபூஹுரைரா (ரலி) - நூல்: திர்மிதீ).

கேள்வி 6. மூன்று தன்மைகள் அமையப்பெறாத எவரும் ஈமானின் சுவையை உணரமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று தன்மைகள் என்னென்ன?
பதில் : (1) ஒருவரை நேசித்தால், அல்லாஹ்வுக்காக நேசிப்பது. (2) இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியப் பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது. (3) அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராவது­. (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்: புகாரி).

கேள்வி 7. உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவரும், (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவரும் யார்? யார்? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில் : உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர்: மர்யம் பின்த் இம்ரான் (அலை).
உலகின் (இன்றைய) பெண்களிலேயே சிறந்தவர்: கதீஜா பின்த் குவாலித் (ரலி).

(அறிவிப்பவர்: அலி (ரலி) - நூல் : முஸ்லிம்).

கேள்வி 8. நபி (ஸல்) அவர்கள் "அபூ துறாப் (மண்ணின் தந்தை) " என்று எந்த நபித்தோழருக்கு பெயர் சூட்டினார்கள்? 
பதில் : அலீ (ரலி) அவர்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) - நூல்: புகாரி).

கேள்வி 9. .அல்லாஹ் மறுமை நாளில் மூன்று மனிதர்களுடன் பேசவோ அவர்களை அருளுடன் பார்க்கவோ மாட்டான். அவர்களுக்கு நோவினைத்தரும் கடும் வேதனை உள்ளது. அந்த மூன்று வகை மனிதர்கள் யார்?
பதில் : 
1.விபச்சாரம் செய்யும் கிழவன்.
2.பொய்யுரைக்கும் அரசன்.
3.பெருமையடிக்கும் ஏழை.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).

கேள்வி 10. தொழுகையில் அடியான் அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது எப்பொழுது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

பதில்: தொழுகையில் அடியான் ஸஜ்தாவின் போது அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : முஸ்லிம்).

No comments:

Post a Comment