Saturday, 24 December 2016


"வினா விடை " கேள்வி பதில் " தொகுப்பு 156

வினா ➖0⃣1⃣

 இறைவழியில் செய்யப்படும் போர் எது? அது எவ்வாறு இருக்கும்?

விடை ➖> 0⃣1⃣

 அல்லாஹ்வின் கொள்கை இவ்வுலகில் மேலோங்குவதற்காக மட்டும் போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார் 

புகாரி ≈ 1⃣2⃣3⃣

வினா ➖0⃣2⃣

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அஞ்சினால் என்ன கூறுவார்கள்.??

வினா ➖0⃣2⃣

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க ஃபீ நுஹூரிஹிம் வநவூதுபிக மின் ஷுரூரிஹிம்
(பொருள்: அல்லாஹ்வே, உன்னை அவர்களுடைய தொண்டைக் குழிகளின் மீது ஆக்குகிறேன். அவர்களுடைய தீயவற்றிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாப்பு தேடுகின்றேன்)
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரி(ரலி),  
நூல்: அபூதாவூத் 1314

வினா ➖0⃣3⃣

ஹுனைன் போர் எந்த மாததில் நடந்தது. ??

விடை ➖0⃣3⃣

فتح الباري - ابن حجر - (8 / 27) أهل المغازى خرج النبي صلى الله عليه و سلم إلى حنين لست خلت من شوال

ஹுனைன் போர்   ஷவ்வால் மாதத்தில் நடந்தது.

(ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம்:8, பக்கம் :27)

வினா ➖0⃣4⃣

மூஸா அலை அவர்கள் குளிப்பதற்காக சென்றபோது கல்லின் மீது ஆடையை வைத்தார்கள் அந்தகல் ஓடியது அதை தொடர்ந்து சென்ற அவர் கல்லை எத்தனை தடவை அடித்தார்கள்?

விடை ➖0⃣4⃣

மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள

புகாரி ≠ 2⃣7⃣8⃣

வினா ➖0⃣5⃣

இடைவெளி நிரப்புக

•••••••••• தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது •••••••••சிறந்ததாகும்

விடை ➖0⃣5⃣

தனியாகத் 

இருபத்தேழு மடங்கு

வினா ➖0⃣6⃣

 நபி ஸல் அவர்களுக்கு இறுதியாக அருளப்பெற்ற இறைவசனம் எது..?

விடை ➖0⃣6⃣

குர்ஆன் 4:176

முஸ்லிம் 

3305 
3306
3307
3308

வினா ➖0⃣7⃣

கால் நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் இதை தவிர  யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் #எத்தனை ”கீராத்கள் கணிசமான அளவுக்குக் குறைந்துவிடும்..??

விடை ➖0⃣7⃣

ஒரு கீராத்கள்

முஸ்லிம் 3204

இரண்டு கீராத்கள் என்று மற்றோறு அறிவிப்பு 

முஸ்லிம் 3202

வினா ➖0⃣8⃣

எந்த வகையான நாய்களை கொள்ளும்படி உத்தரவு விட்டார்கள் நபி ஸல் அவர்கள் ..??

விடை ➖0⃣8⃣

 ”கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள்.

3199 முஸ்லிம்

வினா ➖0⃣9⃣

 சம்பாத்தியங்களிலேயே மோசமானவை எவை??

விடை ➖0⃣9⃣

 விபசாரியின் வருமானம், 
நாய் விற்ற காசு,
 குருதி உறிஞ்சி எடுப்பவர் பெறும் கூலி ஆகியவையே ஆகும். 

முஸ்லிம் 3192

வினா ➖1⃣0⃣

போரில் கைபர் வாசிகளுடன் என்ன ஒப்பந்தம் செய்தார்கள் நபி அவர்கள்??

விடை➖1⃣0⃣

 கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் ”அவற்றின் விளைச்சலான பழங்கள் மற்றும் தானியங்களில் பாதியை (இஸ்லாமிய அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 

முஸ்லிம் 3153

❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣

No comments:

Post a Comment