Monday, 19 December 2016
இஸ்லாமிய வினா விடை தொகுப்பு
கேள்வி 1. உறவுகள் விசயத்தில் எப்படி சத்தியம் செய்ய வேண்டாம் என அல்லாஹ் கூறுகின்றான்?
பதில் : இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம் (குர்ஆன் 24:22)
கேள்வி 2. மூன்று நேரங்களில் அனுமதி பெற வேண்டியவர்கள் யார்?
பதில் : உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ளi பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; (குர்ஆன் 24:58)
கேள்வி 3. நபி (ஸல்) அவர்கள் எந்த வாகனத்தில் வித்ரு தொழுகை தொழுதார்கள்?
பதில் : ஒட்டகம்
பாடம் எண்: 5 புஹாரி: 999
கேள்வி 4. நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகையை வாகனத்தின் மீது தொழுதார்களா?
பதில் : இல்லை
பாடம் எண்: 6 புஹாரி: 1000
கேள்வி 5. இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற கவிதையை பாடியவர் யார் ?
பதில் : அபூதாலிப் (ரலி)
புஹாரி 1008
கேள்வி 6. நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா வசனம் ஓதுகின்ற போது ஒரு மனிதர் என்ன செய்தார்?
பதில் : புஹாரி 1067. அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று 'இவ்வாறு செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார்.
கேள்வி 7. மூல வியாதி உடையவருக்கு நபி (ஸல்) அவர்கள் என்ன சலுகை வழங்கினார்கள்?
பதில் : உட்கார்ந்து தொழுவதற்கு
புஹாரி 1116. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நான் மூல வியாதி உடையவனாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துக் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியின் பாதியே அவருக்கு உண்டு' என்று விடையளித்தார்கள்.
கேள்வி 8. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கிரகண் தொழுகைக்காக மக்கள் எப்படி அழைக்கப்பட்டார்கள்?
பதில் : 1045. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது #அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
கேள்வி 9. அல்லாஹ்விடம் கோபித்துக் கொண்டு சென்றவர் யார்?
பதில் : துன்னுன் (யூனுஸ் நபி )
குர் ஆன் 21:87
கேள்வி 10. மெலிந்த ஒட்டகங்களில் வருபவர்கள் யார்?
பதில் : #ஹஜ் பயணம் மேற்கொள்வோர்
(குர் ஆன் 22:27. ) ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
Rosana binth abbas
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment