Saturday, 24 December 2016


✍🏻112வது "வினா விடை" "கேள்வி பதில்"தொகுப்பு🖋★★

கேள்வி1.
”மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்சந் தோப்பை வாங்கியவர் (விளைச்சல் எனக்கே உரியது என்ற) நிபந்தனையிடாதிருந்தால், அதனுடைய விளைச்சல் யாருக்கு உரியதாகும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ?? 

(1)பதில் :
விற்கிறவருக்கே சொந்தம்

ஆதாரம்: புகாரி(2716)

கேள்வி 2.
(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை என்று யார் கூறினார்? 

(2)பதில்:
 அனஸ் (ரலி)

ஆதாரம்: புகாரி(4489)

கேள்வி 3.
நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு நீதி நிர்வாகத்தைக் கவனிக்க யாரை அனுப்பிவைத்தார்கள்..?? 

(3)பதில்:
முஆத் இப்னு ஜபல்(ரலி)

ஆதாரம்: புகாரி(7371)

கேள்வி 4.
 رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
இந்த வசனம் எந்த அத்தியாயத்தில் உள்ளது.??? 

(4) பதில்:
பனீ இஸ்ராயீல்

ஆதாரம்: 17:24

கேள்வி 5.  رَّبِّ اغْفِرْ وَارْحَم
ْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
இதனுடைய விளக்கம என்ன.?? 

(5) பதில்:

“என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்”

ஆதாரம்:23:118

கேள்வி 6.
“இல்லிய்யுன்” என்பது என்ன?

 (6) பதில்:

(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.

ஆதாரம்:83:20

கேள்வி 7. அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் யார்??

 (7) பதில்:
எப்போது பார்த்தாலும் கடுமையாக
சச்சரவு செய்து கொண்டு இருப்பவன்

ஆதாரம்: புகாரி(2457)

கேள்வி 8.
யார் மீது இரக்கம் காட்டதவனுக்கு
யார் இரக்கம் காட்ட மாட்டான்.?? 

(8) பதில்:
மனிதர்களின் மீது 
அல்லாஹ்

ஆதாரம்: புகாரி(7376)

கேள்வி 9.
 பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவரின் நிலை என்ன.??

 (9) பதில்:
ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். 

ஆதாரம்: புகாரி(2452)

கேள்வி 10.
 யார் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளான நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.?? 

(10) பதில் :
உன் சகோதரன்

ஆதாரம்: புகாரி(2443)
👉🏿👈🏿👉🏿👈🏿👉🏿👈🏿👉🏿👈🏿👉🏿👈🏿👉🏿👈🏿👉🏿👈🏿👉🏿👈🏿👉🏿👈🏿

No comments:

Post a Comment