Saturday, 24 December 2016
#அஸ்ஸலாமு_அலைக்கும் #வரஹ்மத்துல்லாஹி #வ_பரகாத்துஹூ
"இஸ்லாம்" வினா? - விடை! குழுமத்தின் "கேள்வி - பதில்" போட்டி 97யின் தொகுப்பு ...
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹுமானிர்ரஹீம்
=x=x=x=x=x=x=x=x=
கேள்வி 1⃣ பெருநாள் தொழுகைக்கு முன் பின் சுன்னத் தொழுகைகள் உள்ளதா? 🌹
பதில்: 👉 நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர்.
அதன் முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: 📚 புகாரீ 1431, முஸ்லிம் 1616.
கேள்வி 2⃣ ஜுமுஆ நாளன்று தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அப்போது வியாபாரம் செய்து கொண்டிருந்தால் ... வியாபாரத்தை விட்டு விட்டு தொழுகைக்காக விரைய வேண்டுமா? 🌹
பதில்: 👉 📚 அல் குர்ஆன் 62:9 🌹
👉 நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
கேள்வி 3⃣ கடமையான தொழுகைக்கான இகாமத் சொல்லி விட்டால், அந்த நேரத்தில் வேறு தொழுகை, அல்லது சுன்னத் ஏதும் இருப்பின் நிறைவேற்றி விட்டு ஜமாஅத்தில் கலந்து கொள்ளலாமா? 🌹
பதில்: 👉 "(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர
வேறு தொழுகை இல்லை" என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல்: 📚 முஸ்லிம் 1281.
கேள்வி 4⃣ தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதனை ஆண்கள் எவ்வாறு சுட்டிக் காட்ட வேண்டும், பெண்கள் எவ்வாறு சுட்டிக் காட்ட வேண்டும்? 🌹
பதில்: 👉 "(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும்,
கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1203, முஸ்லிம் 723.
கேள்வி 5⃣ இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில், பின்பற்றி தொழுபவர் வேறெதனையும் ஓதலாமா? 🌹
பதில்: 👉 "இமாம் ஓதும் போது நீங்கள் நீங்கள் மவுனமாக இருங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல் : 📚 முஸ்லிம் 680.
📚 குர் ஆன் ஓதப்படும் போது அதைச் செவி மடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்ய்யப் படுவீர்கள்!
அல் குர்ஆன் 7:204
கேள்வி 6⃣ ‘(ஆண்கள்)’ கடமையான ஐ வேளை தொழுகையை தனித்து தொழுவதை விட ஜமாஅத் உடன் தொழுவது எத்தனை மடங்கு நன்மைகள் ? 🌹
பதில்: 👉 தனித்து தொழுவதை விட ஜமாஅத் உடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: 📚 புகாரீ 644, முஸ்லிம் 1153
கேள்வி 7⃣ தொழுகையில் இருக்கும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்பட்டால் உளூ நீங்கி விடுமா? 🌹
(திட்டவட்டமாக தெரியாமல், உணர்வு அது போன்று ஏற்பட்டால்) உளூ நீங்கி விடுமா?
பதில்: 👉 "தொழும் போது ஏதோ ஏற்படுவதாக எனக்கு தோன்றுகிறது என நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள். "(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல் அல்லது நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டு செல்ல வேண்டாம்" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: 📚 புகாரீ 137, முஸ்லிம் 589.
கேள்வி 8⃣ தான் ஒருவரிடம் கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வது எதனை போன்றது என நபி (ஸல்) கூறினார்கள்??? 🌹
பதில்: 👉 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
✔இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்கள்: 📚 புகாரீ: 2621, 2622.
கேள்வி 9⃣ பயணத்திலும் இஹ்ராமுடைய நிலையிலும் இரத்த தானம் செய்யலாமா?
பதில்: (இரத்த தானம் கொடுக்கலாம்)
👉 நபி(ஸல்) அவர்கள் 'இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல் : 📚 புகாரீ 5695.
கேள்வி 🔟 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏழு செயல்களை செய்யுமாறு நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்?
பதில்: நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
1⃣✔ நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2⃣✔ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3⃣✔தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment