Saturday, 24 December 2016
அஸ்ஸலாமு_அலைக்கும் #வரஹ்மத்துல்லாஹி #வ_பரகாத்துஹூ
"இஸ்லாம்" வினா? - விடை! குழுமத்தின் "கேள்வி - பதில்" போட்டி 102 யின் தொகுப்பு
கேள்வி 1⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை……………………………………….. இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.
பதில்: வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல்.
👉 📚 அல் குர்ஆன் 6:125
கேள்வி 2⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
தாங்களும் ………………….இருந்திருக்கலாமே' என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள்.
👉 📚 Ans:முஸ்லிம்களாக
அல் குர்ஆன் 15:2
கேள்வி 3⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது………………………………………………………. அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.
பதில்: வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ.
👉 📚 அல் குர்ஆன் 25:3
கேள்வி 4⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
அல்லாஹ்வே முதலில் ……………………….பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
பதில்: படைத்தான். மீண்டும் அவன் படைப்பான்.
👉 📚 அல் குர்ஆன் 30:11
கேள்வி 5⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
அல்லாஹ்வின் பாதையைக் கேலி யாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக ………………………………………மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.
பதில்: வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர்
👉 📚 அல் குர்ஆன் 31:6
கேள்வி 6⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் …………………….அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
பதில்: பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்.
👉 📚 அல் குர்ஆன் 31:14
கேள்வி 7⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
தன் மீது கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களைச் செவியுறுகிறான். பின்னர்…………………………………………… துன்புறுத்தும் வேதனையை அவனுக்கு எச்சரிப்பீராக!
பதில்: அதைக் கேட்காதவனைப் போல் அகந்தை கொண்டவனாகப் பிடிவாதம் பிடிக்கிறான்.
👉 📚 அல் குர்ஆன் 45:8
கேள்வி 8⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
வானங்களையும், பூமியையும், அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றையும் ……………………………நாம் படைக்கவில்லை. (நம்மை) மறுப்போர் தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்.
பதில்: தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக் கெடுவுடனும் தவிர
👉 📚 அல் குர்ஆன் 46:3
கேள்வி 9⃣ கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம் நாம். ………………………………*
பதில்: நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.
👉 📚 அல் குர்ஆன் 50:16
கேள்வி 🔟 கோடிட்ட இடத்திற்க்கு உரிய சொல்லை பதிலாக தருக ...
இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனே தனது அடியார் மீது …………………..இறக் குகிறான். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.
பதில்: தெளிவான சான்றுகளை.
👉 📚 அல் குர்ஆன் 57:9
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment