Saturday, 24 December 2016


அஸ்ஸலாமு
அலைக்கும் 
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ

இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில் தொகுப்பு=188

கேள்வி 1
குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?

பதில் :
இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

கேள்வி 2
  குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?

பதில் :
சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

கேள்வி 3
 ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

பதில் 
ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல்ஜின்னு(72:10)

கேள்வி 4

  நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?

பதில் துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில்உள்ளது. (19:52)

கேள்வி 5
 எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?

பதில் 
அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்

கேள்வி 6
 எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாகபிரதியெடுக்கப்பட்டது?

பதில் 
உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

கேள்வி 7
 உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?

பதில் 
அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)

கேள்வி 8

 நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?

பதில் குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு  உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)

கேள்வி 9
வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?

பதில் 

எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)

கேள்வி 10

 ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் கூறுபவற்றுல் சிலதைக் கூறுக!

பதில் 🌸🌸🌸?
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக (2:155)
🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment