Wednesday, 7 December 2016


இஸ்லாமிய வினா விடை தொகுப்பு

கேள்வி  1#
*________  உள்ளவையும், ________ உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன*❓

பதில்..1#

👇👇👇👇👇👇👇👇


*வானங்களில்_உள்ளவையும்*
*பூமியில்_உள்ளவையும்*

يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزِ الْحَكِيمِ

1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் அரசன்; தூயவன்; மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன்  62:1
============================

கேள்வி  2#

ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ இதை சொல்லாமல் விட்டு விடாதே என்று நபியவர்கள் முஆத் ரலியிடம்  கூறினார்கள்? நபியவர்கள் கூறிய அந்த துஆ என்ன?

#ஆயத்துல்குர்ஸி_அல்லாத_மற்றொரு_துஆ

பதில்..2#
👇👇👇👇👇👇👇👇

*அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக*

பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் (ரலி),

நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 1286
===================

கேள்வி 3#

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை என்ன???

பதில்  3#

அறியாமைக் காலக் கடைவீதிகள்  
( புகாரி 2098)

கேள்வி 4#

மஸ்ஜிதுந் நபவி இருந்த இடத்தில் முன்னர் என்ன இருந்தது???


பதில்: 4#

பேரிச்ச மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும் இருந்தன. (புகாரி 2106)


கேள்வி 5#

அல்லாஹ்வின் அருள் எப்போது தடுக்கப்படும்???

பதில்: 5#

தர்மம் செய்யாமல் செல்வத்தை சேமித்து வைத்திருக்கும் போது. (புகாரி 1433)

கேள்வி :6#

அநீதி இழைத்தவன் மறுமையில் என்ன சொல்லி புலம்புவான்???


பதில் :6#

இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே என்று புலம்புவான். (25:27)


கேள்வி : 7#

நபி (ஸல்) அவர்கள் எந்த நபித்தோழரை குறித்து நமது சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் என்று சொன்னார்கள்???

பதில்: 7#

அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி)

(புகாரி 3744)

கேள்வி 8#

நபி (ஸல்) அவர்கள் யூதரிடத்தில் எதை அடைமானமாக வைத்தார்கள்???

பதில்: 8#

இரும்புக் கவசம் ( புகாரி 2068)

கேள்வி 9 #

பெண்களுக்குரிய அறப்போர் என்ன?


பதில் :9 #

பாவச்செயல் கலவாத ஹஜ்தான் பெண்களுக்குரிய சிறந்த அறப்போர்.

(புகாரி 2784)

கேள்வி 10#

ஒருவர் சாப்பிடும் உணவில் சிறந்தது எது???

பதில் 10#

தான் உழைத்து உண்ணும் உணவாகும் (புகாரி 2072)

No comments:

Post a Comment