Saturday, 24 December 2016
116வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு
#கேள்வி: 1
மனிதர்கள் அலட்சியத்தோடு கவனமின்றி மறதியில் இருப்பது எது ?
#பதில்:1
கேள்வி கணக்கு நாள்
(ஹிஸாப்)
21:1
#கேள்வி:2
அகிலத்தாரின் அருட்கொடை யார் ?
#பதில்:2
முஹம்மத் நபி
21:107
#கேள்வி:3
மனிதர்கல் சிலரை சிலரை கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் என்னவாகியிருக்கும் ?
#பதில்: 3
மாடங்களும் ஆலயங்களும். வழிப்பாட்டு தலங்களும். அல்லாஹ்வின் பெயர் கூறும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.
22:40
#கேள்வி:4
விசுவாசிகளின் தந்தை என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
#பதில்:4
இப்ராஹிம் நபி
22:78
#கேள்வி:5
இவர்களுக்கு இடையே அல்லாஹ் மறுமைநாளில் தீர்ப்பளிப்பான் ?
#பதில்:5
முஸ்லிம்கள்-யூதர்களும்
ஸாபியீன்கள்
கிருஸ்தவர்களும்
நெருப்பை வணங்குவோரும்
இணைகற்பித்தோரும்
22:17
#கேள்வி:6
அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை ?
#பதில்:6
நன்றி கெட்டவர்களையும் துரோகிகளையும்.
22:38
#கேள்வி:7
உண்மையை பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய் என்ன ஆகிறது ?
பதில்:7
அது பொய்யை நொறுக்குகிறது உடனே பொய் அழிந்து விடுகிறது.
21:18
#கேள்வி:8
அவ்விரண்டிலும்( வானங்களிலும் பூமியிலும் ) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டும் என்னவாகிருக்கும் ?
#பதில்:8
சீரழிந்திருக்கும் அவர்கள் கூறுவதை விட்டு அர்ஷின் அதிபதியகிய அல்லாஹ் தூயவன்.
21:22
#கேள்வி:9
அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும் என விரும்பினால் என்ன செய்யவேண்டும் ?
#பதில்:9
உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . அவர்களை மன்னிக்க வேண்டும்.
24:22
#கேள்வி:10
வானங்களுக்கும் அர்ஷுக்கும் அல்லாஹ் தான் அதிபதி என்று மக்கா காபிர்கள் நம்பினார்களா ?
#பதில்:10
நம்பினார்கள்.
சிந்திக்க மாட்டீர்களா கேட்பீராக!
23:86,87
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment