Saturday, 24 December 2016


அஸ்ஸலாமு
அலைக்கும் 
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ

இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில் தொகுப்பு=187

1 ) தந்தையரின் பெயரால் சத்தியம் செய்யலாமா ?

பதில்  : #கூடாது .. ஆதாரம் .

3380. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கின்றான்" என்று சொன்னார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும்போதும் சரி, பிறர் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி, நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.

2 ) அறியாமை கால தெய்வச்சிலைகள் மீது சத்தியம் செய்தவர்கள் .. அதற்கு பரிகாரமாக எதை சொல்ல வேண்டும் ??

பதில் : 3384. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச்சிலையான) "லாத்தின் மீது சத்தியமாக!" என்று கூறிவிட்டாரோ, அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) #"லா இலாஹஇல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும்!

3 ) ஒருவர் தம் நண்பரிடம் வா சூதாடலாம் . என்று சொல்லிவிட்டால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் ??

பதில் : தர்மம் செய்யட்டும் ,ஆதாரம் முஸ்லீம் : 3384

4 ) எந்த மூவருக்கு எதிராக மறுமையில் தான் வழக்காடுவேன் என நபி அவர்கள் அறிவித்தார்கள் ?

பதில் : 2270. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! #என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; #சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; #கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்.' 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

5 ) சாலை ஓரங்களில் கூட்டாக நின்று பேசக்கூடியவர்கள் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என நபி அவர்கள் கூறினார்கள் ?

பதில் : 2465 ... '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்

6 ) ஒருவர் வீட்டுமுன்பு சுவர் எழுப்ப நினைத்தால் .. எத்தனை முலம் நடைபாதையாக விட்டு விடவேண்டும் ?

பதில் : 2473. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, #ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்

7 ) ஒருவரிடமிருந்து  ஈமான் எனும் இறைநம்பிக்கை ஒளி எப்போது நீக்கப்படுகிறது ?

பதில் : 2475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரின் பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிப்பதில்லை' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
'இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் இச்செயல்களை ஒருவன் செய்வதில்லை என்பதன் கருத்து, 'இவற்றைச் செய்யும் நேரத்தில் இவற்றைச் செய்பவனிடமிருந்து ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒளி நீக்கப்பட்டுவிடுகிறது' என்பதாகும்'

8 ) நயவஞ்சகனிடம் உள்ள நான்கு குணங்கள் எவை ?

பதில் :  2459. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதைவிட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். 
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

9 ) மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் முதலில் எதை பற்றி விசாரிக்கப்படும் ?

பதில் : 6864. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, #கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும். 
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

10 ) அல்லாஹ்வின் கடுமையான கோபத்திற்கு ஆளாகும் மூன்று நபர்கள் யார் ?

பதில் :  6882. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மனிதர்களிலேயே அல

No comments:

Post a Comment