Friday, 16 December 2016
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..
இன்றைய 263 வது கேள்வி பதில் தொகுப்பு : -
1 ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் -------- தொழுகையிலும் ---------- தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
பதில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் #ஃபஜ்ர் தொழுகையிலும் #மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். : முஸ்லீம் 1208
-----------
2 )
தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள(நன்மை)தனை மக்கள் அறிவார்களாயின் அ(தை அடைந்துகொள்வ) தற்குச் ------------------ போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் ----------------- போடுவார்கள்.... இரண்டுக்கும் ஒரே பதில் .
பதில் :
தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள(நன்மை)தனை மக்கள் அறிவார்களாயின் அ(தை அடைந்துகொள்வ) தற்குச் #சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் #சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். முஸ்லீம் 746
----------------------
3 ) ------------- அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள்.
பதில் : #தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். முஸ்லீம் 746
---------====----
4 ) --------- தொழுகையிலும் ---------- தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
பதில் : #இஷாத் தொழுகையிலும் #சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.முஸ்லீம் 746
---------------------
5 ) (பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் ------------- பூசிச் செல்லாதீர்கள்.
பதில் : (பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் #நறுமணம் பூசிச் செல்லாதீர்கள். முஸ்லீம் 758
---------------------
6 ) அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையில் இரவு நேரத்து -------------- , பகல் நேரத்து ----------- ஒன்று சேர்கிறார்கள்.
பதில் : அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையில் இரவு நேரத்து #வானவர்களும், பகல் நேரத்து #வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.முஸ்லீம் 1148
---------------------
கேள்வி : 7 ) தனது சகோதரனை ___ நாட்களுக்கு மேல் வெறுத்து விடுவது முஸ்லிம்களுக்கு அழகானது அல்ல!
அ. மூன்று
ஆ. ஐந்து
இ. பத்து
விடை : அ. மூன்று
தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து விடுவது முஸ்லிம்களுக்கு அழகானது அல்ல!
[நூல்கள் : புகாரி, முஸ்லிம்
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)]
---------------=---======
கேள்வி::: 8
மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது?
பதில்::✔
இறையச்சமும் நன்னடத்தையுமே
நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)
------------------=-----------
கேள்வி:::9 👇👇👇
குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது அதன் ஒவ்வொரு வசனத்திலும் “அல்லாஹ்”என்ற வார்த்தை வந்துள்ளது,அது எந்த சூரா?
பதில் :::👇👇👇
சூரா அல் முஜாதலா.
(58)
-----------------------
கேள்வி (10) : பெண்களே! நீங்கள் இறையச்சத்தோடு வாழ விரும்பினால், பேச்சில் ____ காட்டாதீர்கள். ஏனெனில், எவன் உள்ளத்தில் நோய் இருக்கிறதோ, அவன் ஆசை கொள்வான்!
அ. ஆர்வம்
ஆ. அன்பு
இ. இரக்கம்
ஈ. நளினம்
உ. நகைச்சுவை
விடை : ஈ. நளினம்
பெண்களே! நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில், எவன் உள்ளத்தில் நோய் இருக்கிறதோ, அவன் ஆசை கொள்வான்!
(திருக்குர்ஆன் - 33:32)
-----------------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment