Saturday, 31 December 2016


இஸ்லாமிய வினா விடை


கேள்வி 01)


இடைவெளி நிரப்புக


பஹீரா என்பது அறியாமைக் கால சிலைகளுக்காக அவற்றின் பெயரால் பால் கறக்கக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ___________?

பதில் 01)


பஹீரா என்பது அறியாமைக் கால ஒட்டகமாகும்.


முஸ்லிம் 5486

கேள்வி 02

இடைவெளி நிரப்புக

வயிற்றுப்போக்கு உள்ளவருக்கு  ________________ னில் நிவாரணம் உள்ளது?

பதில் 02)

தேன்

முஸ்லிம் 4454

கேள்வி 03)


அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்
எந்த நோயானாலும் அதற்குக் ____________ நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர!

பதில் 03)


4451,4452 முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த நோயானாலும் அதற்குக் #கருஞ்சீரகத்தில் நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

 #இது_பலகீனம்மான_ஹதீஸ்

கேள்வி 04)


 உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு ”நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாத வரை நான் விடமாட்டேன். ஏனெனில்இஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நிவாரணம் உள்ளது என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்!


விசாரிக்கச் சென்றவர் யார்?

நோயாளி யார்?

பதில் 04)



4433.முஸ்லிம்

(விசாரிக்கச் சென்றவர்
 ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது

(நோயாளி)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முகன்னஉ பின் சினான் (ரஹ்) அவர்கள்


முஸ்லிம்

கேள்வி 05)

இடைவெளி நிரப்புக...

ஒவ்வொரு நோய்க்கும் _________ ஒன்று உண்டு. நோய்க்குரிய _________ சரியாக அமைந்துவிட்டால் _________ _________ மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.

பதில் 05)

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் #நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய #நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால்இ #வல்லமையும்_மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


 முஸ்லிம் 4432

கேள்வி 06)



 ஒரு மனிதர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு என்ன துஆ ஓதுவார்கள்?


பதில் 06)




 அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்”

(மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) என்று பிரார்த்திப்பார்கள்.


முஸ்லிம் 4409

கேள்வி 07)



காலையில் இந்த பழத்தை அதிகாலை உண்பதில்  விஷமுறிவு  உள்ளது!  அது எது?


பதில் 07)

4159.முஸ்லிம்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மதீனாவின்) மேட்டுப் பகுதியில் விளையும் ”#அஜ்வா” (ரகப்) #பேரீச்சம்_பழத்தை அதிகாலை உண்பதில் ”#நிவாரணம்” அல்லது ”#விஷமுறிவு”  உள்ளது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கேள்வி 08)


உக்ல் குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஇ  இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிமொழி அளித்து மதீனாவில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக்கொள்ளாமல் அவர்களது உடல் நோய் கண்டது. எனவே அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப்பற்றி முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன மருந்து உட்கொள்ள சொன்னார்?!

பதில் 08)


3448.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”நம் ஒட்டக மேய்ப்பருடன் ஒட்டகங்களிருக்கும் இடத்திற்குச் சென்று அவற்றின் #பாலையும்_சிறுநீரையும் பயன்படுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

கேள்வி :-09)


நான் சோதிடர்கள் சூனியக்காரர்கள் கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்” என்று கூறியவர் யார்?

அந்த வார்த்தைகளைச் சொன்னவர் யார்?

பதில் :- 09)


1576. முஸ்லிம்

”அஸ்து ஷனூஆ” எனும் குலத்தைச் சேர்ந்த #ளிமாத்_பின்_ஸஅலபா என்பார்

 #அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் ”அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும்இ முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன்.

கேள்வி :

No comments:

Post a Comment