Saturday, 24 December 2016


109வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு 

*1)கேள்வி:::

_________  தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.…?

*1)பதில்::🛬

முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.

நூல்: அஹ்மத் 22467

#2)கேள்வி::✈

யாருக்கு 
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்..?

#2)பதில்::🛬

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.

நூல்: முஸ்லிம் 397

#3)கேள்வி::

யாருக்கு  மலைகள் பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன::?

#3)பதில்::🎈🎈

தாவூது நபி 

மலைகள், பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன - 21:79, 34:10, 38:19

#4)கேள்வி::✈

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் யார்??

#4)பதில்:::🛬

மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (6205)

#5) கேள்வி::✈

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்  நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று தான் செவியேற்றதைப் போன்றே மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு _________ ___________ செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் இந்த இறைச் செய்தியை நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்.…?

#5)பதில்::🛬

அல்லாஹ் அருள்புரிவானாக!

நூல்: திர்மிதி (2657)

#6) கேள்வி::✈

நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ______ _______ ________ ________ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…?

#6) பதில்::🛬

ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ஆமீன்  கூறுகின்றனர்..

முஸ்லிம் 1677, 1678

#7)கேள்வி::✈

முற்கால இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி நாயகம் ஸல் அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள் அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி  ______ _______ ________ ________ _________ _____ என்று சொல்லிக் கொண்டிருந்தார்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.…?

#7) பதில்::🛬

"இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்'

நூல் : புகாரி 3477

#8) நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் ______ _______ _______ காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்…?

#8)பதில் 🎈🎈

#பெரும்_சப்தம்_தாக்கியது.

  11:94

#9)கேள்வி::

காணாத கனவைக் கண்டதாக கூறுபவருக்குரிய மறுமையில் தண்டனை என்ன..?

#9)பதில்::🎈🎈

ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒரு போதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.). . .  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 7042

#10)கேள்வி:::

உலகில் மது அருந்திவிட்ட பிறகு அதைக் கைவிட்டு அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் ______ _______ _________ ______…?

#10)பதில்:::

(சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) புகாரி 5575

No comments:

Post a Comment