Saturday, 24 December 2016
❣السلام عليكم ورحمة الله وبركاته.❣
❣عيد المباك كل عام وانتم بالخير❣
கேள்வி பதில் தொகுப்பு 170வது
வினா ➖>>>¹↓
அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் என்னவாக ஆகிறான் ¿¿?
விடை ➖>>>¹↓
அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
குர்ஆன் 23:14
வினா ➖ >>>↓²>
இல்யாஸ் (அலை) அவர்களுடைய சமூதாயத்தார் எந்த சிலையை வணங்கினார்கள்?
அதன் பெயர் என்ன?
விடை ➖>>>↓²
"பஅல்' எனும் சிலையை
குர்ஆன் 37:127
வினா ➖>>>³↓
யூனுஸ் (அலை) அவர்களை மீன் விழுங்க காரணம் என்ன?
எந்த சந்தர்ப்பத்தில்?
விடை➖>>³↓
நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். (37:141)
இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.
குர்ஆன் 37:142
வினா ➖>>>⁴↓
யூனுஸ் (அலை) மீது நிழல் தருவதற்காக எந்த கொடியை முளைக்கச் செய்தான்???
விடை➖>>>⁴↓
அவர் மீது நிழல் தருவதற்காக #சுரைக்_கொடியை முளைக்கச் செய்தோம்.
குர்ஆன் 37:146
வினா➖>>>5↓
பொருத்தமான சொல்லை நிரப்புக
அவரை …………………… அல்லது ………………… அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்
விடை ➖>>>5↓
ஒரு லட்சம்
அதை விட
37:147
வினா➖>>>6↓
மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் யார்..?
விடை➖>>>6↓
நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதல் ஸலாம் கூறுபவரே ஆவார்”
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அபூதாவூத் (4522)
வினா➖>>>7
#நிரப்புக
இறைத்தூதர் அவர்களே இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. அவ்விருவரில் ___________ _____ ______ ___ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்…?
விடை➖>>>7↓
அல்லாஹ்விடம் மிக நல்ல
தகுதியானவரே
திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன் 858
வினா➖>>>8↓
உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ___ ____ அல்லது _____ அல்லது _____ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.…?
விடை➖>>>8↓
உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு #மரமோ, அல்லது #சுவரோ அல்லது #கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூ தாவூத் (4523)
வினா➖>>>9↓
அலைக்கஸ் ஸலாம் என்பது யார் ஸலாமாகும்????
விடை ➖>>>9↓
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”#அலைக்கஸ்_ஸலாம் யாரசூலல்லாஹ்” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ” அலைக்கஸ் ஸலாம் ” என்று கூறாதே. ஏனென்றால் ” #அலைக்கஸ்_ஸலாம் ”#என்பது_இறந்தவர்களின்_ஸலாம்_ஆகும் ” என்று கூறினார்கள்.
நூல் : திர்மதி (2646)
வினா➖>>>10↓
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் எவ்வாறு இருக்கும்.???
விடை➖>>>10↓
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள்.
அவர்களுடைய ஸலாம் கூறுதலாகிறது (#வார்தைகள்_இல்லாமல்) #முன்கைகள்_மூலமும், #தலை (#தாழ்த்துவதின்) மூலமும். #சைக்கினையின் மூலமும் ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அஸ் ஸூனனுல் குப்ரா பாகம் : 6 பக்கம் : 92
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment