Saturday, 24 December 2016
அஸ்ஸலாமுஅலைக்கும்
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ
#கேள்வி_பதில்_தொகுப்பு_177வது
வினா→01}
எந்த வார்த்தையை கூறினால் சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும்..?
#விடை→01)
سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ
திர்மிதி⛔ 3464
வினா→02}
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.??
#விடை→02)
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற வீட்டை சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் ⛔926
வினா→03}
மலையளவு நன்மை கிடைக்க வேண்டு என்றால் என்ன செய்ய வேண்டும்?
#விடை→03)
ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் ⛔1725
வினா→04}
மார்க்கத்தின் பெயரால் புதிய செயல் அல்லது கொள்கை ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது யார் சாபம் உண்டாகும்?
#விடை→04)
1867⛔ புகாரி
அல்லாஹ்வுடைய.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!
வினா→05}
பாம்பு தன் புற்றில் சென்று அபயம் பெறுவது போல் ____ ____ _______ மதீனாவில் அபயம் பெறும்…?
#விடை→05)
ஈமான் எனும் இறை நம்பிக்கை
புகாரி ⛔1876
வினா→06}
எந்த ஊர்க்கு இரண்டு மடங்கு பரக்கத்தை ஏற்படுத்துவாயாக என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். ?
#விடை→06)
மதீனா
புகாரி ⛔1885
வினா→07}
அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்த ஊர் எது ?
எதனால் நோய் அதிகமானதாக இருந்தது ?
#விடை→07)
1889⛔புகாரி
ஊர் மதீனா
நோய் இருந்த காரனம்
புத்ஹான் எனும் ஓடையில் மோசமான கெட்டுப்போன தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது
வினா→08}
நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யார்க்கு காய்ச்சல் ஏற்ப்பட்டது. ?
#விடை→08)
அபூ பக்கர் ரலி
பிலால் ரலி
புகாரி⛔1889
வினா→09}
இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து இவ்வாறு யார் பிரார்த்தனை செய்தார்கள். ?
#விடை→09)
உமர் ரலி
புகாரி⛔1890
வினா →10}
கேள்வி::
பிலால் ரலி மதீனாவிற்க்கு வந்ததும் காய்ச்சல் ஏற்ப்பட்டு காய்ச்சல் நீங்கியதும் யாரை சபித்து பிரார்த்தனை செய்தார்கள். ?
#விடை →10)
பிலால்(ரலி) இறைவா ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை அப்புறப்படுத்தி இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல் அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி சபித்து விடுவாயாக
புகாரி⛔1889
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment