Thursday, 15 December 2016


இஸ்லாமிய வினா விடை தொகுப்பு 


கேள்வி 01

கணவன் மனைவி விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..??

பதில் 🎈

கணவன் சார்பில் ஒருவரும் மனைவியின் சார்பில் சேர்ந்து சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்..

ஆதாரம்-(குர்ஆன் 4:35)

கேள்வி 02

முதல் தலாக் விட்டப்பின் எவ்வள்வு காலத்திற்க்குள் மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழலாம்..??

பதில் 🎈

மூன்று மாதவிடாய் காலம் முடிவதற்க்குள்..

ஆதாரம்-(குர்ஆன் 2:228)

கேள்வி 03

மூன்று தலாக் விட்டப்பின் மனைவியுடன் சேர்ந்து வாழலாமா..??

பதில் 🎈

#வாழமுடியாது

ஆதாரம்- குரான் 2:23&40)

கேள்வி 04

மூன்று தலாக் விட்டப்பின் அதே மனைவியுடன் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்..??

பதில் 🎈

அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து அந்த கணவன் அவளை விவகாரத்து செய்தபின் திருமணம் செய்து கொள்ளலாம்..

ஆதாரம்-(குர்ஆன் 2:230)

கேள்வி 05

குழந்தைக்கு எவ்வளவு காலம் பாலூட்ட வேண்டும்..??

பதில் 🎈

இரண்டு ஆண்டுகள்

ஆதாரம்-(குர்ஆன் 2;233)

கேள்வி 06

மனைவியுடன் கூடுவதில்லை என சத்தியம் செய்தவர் எவ்வளவு நாள் பிரிந்திருக்கலாம்..??

பதில் 🎈

நான்கு மாதம்

ஆதாரம்-(குர்ஆன் 2;226)

கேள்வி 07

பெண்ணின் இத்தா காலம் எவ்வளவு..??

பதில் 🎈

நான்கு மாதம் பத்து நாள்

ஆதாரம்-(குர்ஆன் 2;234)

கேள்வி 08

இத்தா காலத்தில் மறுமணம் பேசலாமா..??

பதில் 🎈

#பேசக்கூடாது..!!

ஆதாரம்-(குர்ஆன் 2;235)

கேள்வி 09

கர்ப்பிணியான விவகாரத்து செய்யப்பட்ட பெண்ணின் இத்தா காலம் எவ்வளவு..??

 பதில் 🎈

குழந்தை பிரசவிக்கும் வரை

ஆதாரம்-(குர்ஆன் 65;4)

கேள்வி 10 

மாதவிடாய் அற்றுப்போன விவகாரத்து செய்யப்பட்ட பெண்ணின் இத்தா காலம் எவ்வளவு..??

 பதில் 🎈

#மூன்று_மாதங்கள்..!!

ஆதாரம்-(குர்ஆன் 65;4)


Rosana binth abbas

No comments:

Post a Comment