Saturday, 24 December 2016


131வது "இஸ்லாமிய "வினா விடை " கேள்வி பதில் " தொகுப்பு

கேள்வி 1⃣  இரவுத் தொழுகை (தஹஜத்) என்றால் எவ்வாறு எப்படித் தொழ வேண்டும் என நபிகள் நாயகம்(ஸல்) அறிவித்துள்ளார்கள்?

1⃣ பதில்: 👉 📚 ஷஹீஹ் புகாரி1137. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! இரவுத் தொழுகை எவ்வாறு?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '#இரண்டிரண்டு_ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடுமென) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவீராக' என்று விடையளித்தார்கள்.

#அறிவிப்பவர்:   💐இப்னு உமர்(ரலி அவர்கள்💐

கேள்வி 2⃣ மகரந்தச் சேர்க்கை செய்யப் பட்ட நிலையில் ஒரு தோப்பை ஒருவர் மற்றவருக்கு விற்றால் அதன் விளைச்சல் விற்றவருக்கு சொந்தமாகுமா??

2⃣ பதில்: ஆம் அந்த விளைச்சல் விற்றவருக்கே சொந்தம்!

👉 📚 ஷஹீஹ் புகாரி 2716.'மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்சந் தோப்பை வாங்கியவர் (விளைச்சல் எனக்கே உரியது என்ற) நிபந்தனையிடாதிருந்தால், விற்கிறவருக்கே அதனுடைய விளைச்சல் உரியதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

#அறிவிப்பவர்:: 💐அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள்💐

கேள்வி 3⃣

நேத்திக் கடன் செய்யவதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்தார்களா ?  அல்லது தடுத்தார்களா?

3⃣ பதில்: நேத்திக் கடன் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) தடுத்துள்ளார்கள்.
#!!!அறியாமல் நேர்ந்திருந்தால் அதை நிறைவேற்றி விட வேண்டும் மேலதிக விவரங்களுக்கு புஹாரியில் காண்க:

3👉 📚 ஷஹீஹ் புகாரி 6608.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.
#அறிவிப்பவர்: 💐இப்னு உமர்(ரலி)💐

கேள்வி 4⃣ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் மீது செய்வார்கள் அல்லவா…  பெரும்பாலும் அல்லாஹ்வின் எந்த செயலை கூறி சத்தியம் செய்வார்கள் ?

4⃣ பதில்: 👉 📚 ஷஹீஹ் புகாரி 6617: நபி(ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) 'இல்லை. #உள்ளங்களைப்_புரட்டக்கூடியவன்_மீதாணையாக!' என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.

#அறிவிப்பவர்: 💐அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)💐

கேள்வி 5⃣ செல்வ வளமும், ஆயுளும் வேண்டுமென விரும்புப வர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரை என்ன?

5⃣ பதில்: 👉 📚 ஷஹீஹ் புகாரி 2067: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்' என்று விரும்பினால் #அவர்_தம்_உறவினர்களுடன்_சேர்ந்து_வாழட்டும்!'

#அறிவிப்பவர்: 💐அனஸ் இப்னு மாலிக்(ரலி💐

கேள்வி 6⃣ அல்லாஹ்வுக்கு பணிந்தோரை தவிர மற்றவர்களுக்கு பாரமாக இருக்கும் செயல்கள் என அல்லாஹ் கூறுபவை எவை?

👉 6⃣ பதில்: பொறுமை, மற்றும் தொழுகையாகும்.
அல் குர்ஆன் 👉 📚2:45 பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடை யோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

கேள்வி 7⃣இஸ்லாத்தில் எந்த அளவுக்கு நுழைய வேண்டும் என்றும்  மற்றும் எதனை பின்பற்றக் கூடாது  என்றும்  அல்லாஹ் கூறுகின்றான்?

7⃣பதில்: 👉 அல் குர்ஆன் 📚 2:208  நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

கேள்வி 8⃣
அல்லாஹ்' தர்மங்களை வளர்ப்பதற்காக எதனை ஹராம் ஆக்குகின்றான், அழிக்கிறான்.?

8⃣ பதில்: 👉 அல் குர்ஆன் 📚 2:276 அல்லாஹ் #வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

👉 அல் குர்ஆன் 📚 2:278 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!

கேள்வி 9⃣
உலகில் முதல் மனிதராம் ஆதாமிலிருந்து உலகில் இறுதியாக மரணிக்கும் நபர் வரை உள்ளவர்களுக்கான இறை மார்க்கம் எது?

9⃣பதில்: 👉 அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே.
அல் குர்ஆன் 📚3:19

கேள்வி 🔟 அகிலத்தாரை விட எந்த நான்கு குடும்பத்தினரை அல்லாஹ் தேர்வு செய்ததாக கூறுகின்றான்?

பதில்: 👉 அல் குர்ஆன் 📚 3:33 #ஆதம், #நூஹ், #இப்ராஹீமின் குடும்பத்தார், மற்றும் #இம்ரானின் குடும்பத்தினரை அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.

No comments:

Post a Comment