Tuesday, 13 December 2016



கேள்வி::::1

கம்பு சாட்டை கயிறு  இவை போன்றவைகளை ஒரு மனிதன் கண்டெடுத்தால் அதைப் பயன்படுத்தலாமா..?

பதில்:::

கம்பு, சாட்டை, கயிறு மற்றும் இவை போன்றவைகளை ஒரு மனிதன் கண்டெடுத்தால் அதைப் பயன்படுத்துவதற்கு நபியவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல் அபூதாவூத் 1459

கேள்வி:::2

மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களில் புதையல் கண்டெடுக்கப்பட்டால் ஐந்தில் எத்தனை வரியாகச் செலுத்தப்பட வேண்டும்..?

பதில்::  2

ஐந்தில் ஒன்று வரியாகச் செலுத்தப்பட வேண்டும்

அஹ்மத் 6396

கேள்வி:::3

மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன..?

பதில்::

அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய்ய வேண்டும் அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்து விடுவேண்டும் இல்லையென்றால் அது உனக்குரியதாகும் என்று நபி ஸல்  கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 6396

கேள்வி:::4

நபி ஸல் அவர்களிடம் தொங்கவிடப்பட்ட பேரீத்தம் பழங்களைப் பற்றி கேட்கப்பட்டது அதற்ககு நபி அவர்கள் என்ன கூறினார்கள் ..?

பதில்::::

ஒருவன் இரகசியமாக முடிந்து எடுத்துக் கொள்ளமால் தன்னுடைய வாயினால் அந்த இடத்திலேயே சாப்பிட்டால் அவன் மீது எந்தக் குற்றமும் இல்லை. என்று கூறினார்கள்.

அபூதாவுத் 3816

கேள்வி::::5

தொங்கவிடப்பட்ட பேரீத்தம் பழத்தில் இருந்து ஏதாவது ஒரு அளவிற்கு எடுத்துச் சென்றால் அவருக்கு அது போன்று #எத்தனை மடங்கு அபராதமும் தண்டனையும் இருக்கிறது..?

பதில்::

அது போன்று இருமடங்கு அபராதமும் தண்டனையும் இருக்கிறது

அபூதாவுத் 3816

கேள்வி:::6

யார் தானியக் களஞ்சியத்திற்கு வந்த பிறகு அதிலிருந்து ஏதாவது ஒரு அளவு திருடிச் சென்றால் அவன் திருடியது [________] மதிப்பிற்கு இருந்தால் அவனுக்குக் கைவெட்டுதல் இருக்கிறது…?.

பதில்:::

திருடியது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அவனுக்குக் கைவெட்டுதல் இருக்கிறது.

அபூதாவுத் 3816

கேள்வி::::7

யார் கேடயத்தின் மதிப்பை விடக் குறைவாகத் திருடுகிறாரோ அவருக்கு திருடியதின் மதிப்பைப் போன்று #எத்தனை_மடங்கு அபராதம் உண்டு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்..?

பதில்:::

இருமடங்கு

அபூதாவூத் 3816

கேள்வி::::8

மேய்ச்சல் நிலத்திலே பாதுகாப்பாக உள்ள கால்நடைகளைத் திருடுபவனுக்கு எத்தனை மடங்கு அபராதம் உண்டு

தண்டனை என்ன?

இரு பதில்கள்👆

பதில்:::

 #இருமடங்கு அபராதமும் தண்டனைக்குரிய #அடியும் உண்டு என்று கூறினார்கள்.

அஹ்மத் 6396

கேள்வி::9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானும் அபூபக்ரும் ____ இப்படி இருந்தோம்  நானும் அபூபக்ரும் _____ இப்படிச் செய்தோம் நானும் அபூபக்ரும் _____ இங்கே சென்றோம்…?

பதில்::

பெரும்பாலான நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானும் அபூபக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம் என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்

புகாரி 3677

கேள்வி::10

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடத்தில் மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?
 என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்::?

பதில்::

நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள்.

திர்மிதி (1913)

No comments:

Post a Comment