Saturday, 24 December 2016
அஸ்ஸலாமு_அலைக்கும் #வரஹ்மத்துல்லாஹி #வ_பரகாத்துஹூ
"இஸ்லாம்" வினா? - விடை! குழுமத்தின் "கேள்வி - பதில்" போட்டி 98யின் தொகுப்பு ...
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹுமானிர்ரஹீம்
💟 #கேள்வி:::1⃣👇👇👇
ரூஹுல் அமீன் என்பது யாருடைய பெயர் ::?
💟 #பதில்:::👇👇👇
#ஜிப்ரில் (அலை)
ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர் - 26:193
💟 #கேள்வி :::2⃣👇👇👇
அல்லாமுல் குயூப் என்றும் அல்லாஹ்விற்கு பெயர் இருக்கிறது
அல்லாமுல் குயூப் 👈என்பதன் அர்த்தம என்ன ::?
💟 #பதில்::👇👇👇
அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109, 5:116, 9:78
💟 #கேள்வி:::3⃣👇👇👇
எவர்கள் இருவரும் அம்புகளின் மூலம் குறி பார்ப்பவர்களாக இருக்க வில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:: ?
💟 #பதில்:::👇👇👇
இப்ராஹீம் (அலை),
இஸ்மாயீல்(அலை)
புகாரி:: 4288
💟 #கேள்வி::4⃣👇👇👇
மீனின் வயிற்றுக்குள் இருந்து யூனுஸ் (அலை) அவர்கள் செய்த துஆ எது:::??
💟 #பதில்:::👇👇👇
" லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன் "
"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”
(21:87)
💟 #கேள்வி::5⃣👇👇👇
அன்சாரிகளை வெறுப்பது எதன் அடையாளம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:::???
💟 #பதில்:::👇👇👇
நயவஞ்சகத்தின் அடையாளம்
“ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி :: 17
💟 #கேள்வி::6⃣👇👇👇
உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் உள்ளவர்களை அல்லாஹ் நரகில் இருந்து வெளியேற்றும் போது அவர்கள் எவ்வாறு(எந்த நிறத்தில்) வெளியேறுவார்கள்::??
💟 #பதில்:::👇👇👇
#கருத்தவர்களாக
(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு “ஹயாத்“ என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் “ஹயா“ என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (குறிப்பு:) இதே ஹதீஸை உஹைப் அறிவிக்கும்போது (ஹயா அல்லது ஹயாத் என்று) சந்தேகத்தோடு அறிவிக்காமல் “ஹயாத்“ என்னும் ஆறு என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பதற்குப் பதிலாகக் கடுகளவேனும் நன்மை என்ற வார்த்தையையும் குறிப்பிடுகிறார்.
ஷஹீஹ் புகாரி ::22
💟 #கேள்வி::: 7⃣👇👇👇
உமர் ரலி அவர்கள் எந்த அளவுக்கு மார்க்கத்தை முழுமையாக பின்பற்றினார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு கனவில் காட்டப்பட்டது::???
💟 #பதில்::: 👇👇👇
தரையில் இழுபடும் அளவுக்கு நீண்ட சட்டை அணிந்தவர்களாக
. “நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டாப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு “மார்க்கம்“ “ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி ::: 23
💟 கேள்வி::8⃣ 👇👇👇
அல்குர்ஆன் ஓதும் நயவஞ்சகனுக்கு எதை உதாரணமாக குறிப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:::??
💟 #பதில்::: 👇👇👇
துளசி செடியை
1461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று; சுவையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது, பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அ
Subscribe to:
Post Comments (Atom)
யார் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ?
ReplyDeleteஈஸா அலைஹி ஸலாம்
ReplyDeleteதொழுகையை விடுவது மனிதனை எதில் சேர்த்து விடும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்?
ReplyDeleteSlotsCity Casino in El Paso - Mapyro
ReplyDeleteSlotsCity 천안 출장안마 is 이천 출장마사지 a well-regarded 문경 출장안마 online gaming destination in El Paso, Texas. The gaming excitement of the gaming industry 당진 출장안마 is 제주 출장안마 unmatched. The