Saturday, 24 December 2016
அஸ்ஸலாமு
அலைக்கும்
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ
இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில் தொகுப்பு =189வது நாள்
கேள்வி::1🔐
நபிகளார்களின் பிரச்சாரத்தை கண்ட இணைவைப்பாளர்கள் எவ்வாறான குறைகளை கூறலானார்கள்..?
பதில்::🔓
நமது பெரியவர்களை முட்டாளாக்கிறார், நமது முன்னோர்களை ஏசுகிறார், நமது மார்க்கத்தை குறை கூறுகிறார், நமது கூட்டமைப்பை பிரிக்கிறார், நமது தெய்வங்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத் 6739)
கேள்வி::2🔐
உக்பா பின் முஐத் என்பவன்
நபிகளாரை எவ்வாறு துன்புறுத்தினான்?
அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களில் மிக கடுமையானது இதுவே::!
பதில்::🔓🔓
கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார்கள். (ஆதாரம் : புகாரீ 3678)
கேள்வி::3🔐
நபி (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தை தடுக்க இணைவைப்பாளர்கள் செய்த முயற்சிகள் என்ன..?
பதில்::🔓🔓
முஹம்மதே உமக்கு பணம் வேண்டுமானால் கேள்! உம்மை குறைஷிகள் பணக்காரராக மாற்றுகிறோம். அல்லது, உமக்கு பெண்கள் மீது ஆசை இருந்தால் குறைஷிகளில் உமக்கு பிடித்த பெண்களை காட்டும்! நாம் இதைப் போன்ற பத்து பெண்களை திருமணம் முடித்துத் தருகிறோம். ஆனால் நீ உன் பிரச்சாரத்தை விட்டுவிடவேண்டும் என்றனர்.
(ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818),
முஸ்னத் அப்து இப்னு ஹூமைதீ (1123)
கேள்வி::4🔐
யார் இந்த சஹாபி
கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை“ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன் இரவில் அதைப் பார்க்கலானேன் எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் (கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்! என்று பதிலளித்தார்கள்.
பதில்::🔓
அதீ இப்னு ஹாதிம்(ரலி)
புகாரி : 1916
கேள்வி::5
ரப்பி இன்னீ ளலம்து நஃபஸீ ஃப்ஃபிர்லீ எனக் கூறியது யார்.?
பதில் :
மூஸா நபி ( 28 :16)
கேள்வி::6
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் எந்த ஒட்டகத்தின் மீதமர்ந்து குத்பா உரை நடத்தினார்கள்..?
பதில்:👇
அள்பாஎனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து
அஹ்மத் 19218, அபூதாவூத் 1669
கேள்வி::7
ருக்கையா ரலி அவர்களின் மகன் அப்துல் லாஹ் அவர்களை யார் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்கள்::?
பதில் 🎈🎈
ருக்கையாவின் மகன் அப்துல்லாஹ் (ரலி)
நபிகளாரின் மகள் ருக்கையா (ரலி) அவர்களின் மகன் அப்துல் லாஹ் ஆறு வயதை எட்டியபோது ஒரு சேவல் அவரது முகத்தில் கொத்தியது. அதனால் முகம் வீங்கியது. சிகிச்சைகள் பலனளிக்காமல் ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் மாதம் மரணித்தார்கள். அவரது ஜனாஸாவிற்கு நபி(ஸல்) தொழுகை நடத்தினார்கள். உஸ் மான் (ரலி) அவர்கள் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்கள்
அல் இஸ்திஆப் : 3343
கேள்வி:::❓8
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர்கள் யார்..?
பதில்::✔
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 5178
கேள்வி 9
பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும் இறைவன் இடத்தில் எதை பெற்றுத் தரும்..??
பதில்.
திருப்தியைப் பெற்றுத் தரும்
நஸயீ 5, அஹ்மத் 23072
கேள்வி::10
விபசாரம் புரிகின்ற முதியவரை
மறுமையில் அல்லாஹ் என்ன செய்வான்.?
பதில்::🎈
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான், அவர்களைப் பார்க்கவுமாட்டான் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர் (தாம் அம்மூவரும்)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 172
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment