Saturday, 24 December 2016
108வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு ★★★
1 ) தாங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்கள்..நேசர்கள்... என்று யார் கூறிக் கொள்கிறார்கள் ??
1) பதில் : யூதர்களும்.. கிருஸ்தவர்களும்..ஆதாரம் குர் ஆன் 5 : 18
***********************
2 ) மூசாவின் கூட்டத்தார் எத்தனை ஆண்டுகள் பூமியில் தட்டழிந்து திரிவார்கள் என அல்லாஹ் கூறினான் ???
2 ) பதில் : 40 ஆண்டுகள் .. ஆதாரம் குர் ஆன் 5 : 26
*****************-***
3 ) மூமீன்கள் யாரை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம் என அல்லாஹ் எச்சரிக்கின்றான் ???
3 ) பதில் : யூதர்களையும்... கிறிஸ்தவர்களையும்.. ஆதாரம் குர் ஆன் 5 : 51 ( kaafir )
*************************
4 ) மூமீன்களுக்கு உற்ற நண்பர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான் ???
4 ) பதில் ; அல்லாஹ்வும்..அவனுடைய தூதரும்..ஈமான் கொண்டு தொழுது ஜக்காத் கொடுத்து, அல்லாஹ்வின் கட்டளைக்கு தலை சாய்த்தும் வருபவர்கள்...ஆதாரம் குர் ஆன் 5 : 55
*****************************-*
5) மூசாவின் கூட்டத்தாரை அல்லாஹ் எத்தனை பிரிவுகளாக தனி தனியாக பிரித்தான் ???
பதில் 12 - பிரிவுகளாக ...ஆதாரம் குர் ஆன் 7 : 160
********************--********
6 ) மூமீன்கள் தொழுகைக்கு அழைத்தால் காபிர்கள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் ???
6 ) பதில் : பரிகாசமாகவும்..விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆதாரம் குர் ஆன் 5 : 58
**************************
7 ) வேதமுடையோர் மூமின்களை எதற்காக பழிக்கிறார்கள் என அல்லாஹ் கூறுகிறான் ???
7 ) பதில் : அல்லாஹ்வின் மீதும்..எங்களுக்கு அருளப்பட்ட வேதத்தின் மீதும்..நம்பிக்கை கொண்டதால்...ஆதாரம் குர் ஆன் 5 : 59
************************
8 ) அல்லாஹ் கோபம் கொண்டு சில கெட்ட மனிதர்களை எந்த விலங்கினமாக மாற்றினான் ???
8 ) பதில் : குரங்காகவும்..பன்றியாகவும்..ஆதாரம் 5 : 60
*********************
9 ) பாவத்திலும் அக்கிரமத்திலும் விலக்கப் பட்ட உணவை உண்பவரையும் யார் தடுத்திருக்க வேண்டாமா என அல்லாஹ் கூறுகிறான் ???
9 ) அவர்களின் மேதைகளும்.. குருமார்களும்..ஆதாரம் குர் ஆன் 5 : 63
***********************
10 ) அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என சொல்லியதின் மூலம் சபிக்கப் பட்டவர்கள் யார் ???
10 ) பதில் : யூதர்கள் ... ஆதாரம் குர் ஆன் 5 : 64
**********************************
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment