Saturday, 24 December 2016


பரிசுப்போட்டி 30:07:16 கேள்வி பதில் தொகுப்பு:.
கேள்வி பதில்களின் தொகுப்பு
*********************************
கேள்வி1⃣
➡ நபி(ஸல்) அவர்களுக்கு முஹம்மத் 
 என்ற பெயரை தவிர வழங்கப்பட்ட நான்கு பெயர்கள் யாவை...??
விடை: அஹ்மத், அல்மாஹி, அல்ஹாஷிர், அல் ஆக்கிப்
ஆதாரம்: புகாரி 3532

கேள்வி2⃣
➡ நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்த ஆரம்பக் காலத்தில் பைத்துல் மக்திஸ் நோக்கி எத்தனை மாதங்கள் தொழுதார்கள்...??

விடை: 16 அல்லது 17 மாதங்கள்
ஆதாரம்: புகாரி 40

கேள்வி3⃣
➡நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின்போது புராக் வாகனத்தில் ஏறுவதை எந்த இரு நபித்தோழர்கள் பாதி தூக்கத்தில் கண்டனர்...??

விடை: ஹம்ஜா(ரலி) மற்றும் ஜாஃபர் (ரலி)
ஆதாரம்: புகாரி 3207

கேள்வி4⃣
➡ அஹ்சாப் போரின்போது கை நரம்பில் காயம்பட்டு இறந்த நபித்தோழர் யார்? அவரைக் கொன்றவன் பெயர் என்ன..??

விடை:  ச அத் பின் முஆத்(ரலி) ஹிப்பான் பின் அரிக்கா
ஆதாரம் : புகாரி 4122
கேள்வி5⃣
➡ கைபர் போரிலன் சமயத்தில்  நபி(ஸல்) அவர்கள் யாரை திருமணம் 
செய்துக் கொண்டார்கள்..? அவருக்கு மஹராக எதனைக் கொடுத்தார்கள்..??

விடை: ஸஃபிய்யா(ரலி)யை விடுதலையை மஹராக கொடுத்து மணம்புரிந்தார்கள்
ஆதாரம்: புகாரி 4200

கேள்வி6⃣
➡ நபி(ஸல்) மரணிக்கும் தருணத்தில் ஃபாத்திமா(ரலி) ஏன் அழுதார்கள்?? பின்பு ஏன் சிரித்தார்கள்...?

விடை: 3626. அதற்கு அவர்கள்இ ”என்னிடம் நபி(ஸல்) அவர்கள் இரகசியமாகஇ (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால்இ நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு ”அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நானே” என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

கேள்வி7⃣
➡ முஃதா யுத்தத்தில் படைத்தளபதிகளாக பொறுப்பேற்ற நபித்தோழர்கள் நால்வரில் இருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுக...!
விடை:
2798. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். 
நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பது போல் கூறலானார்கள்:) ”ஸைத் இப்னு ஹாரிஸா கொடியைக் கையிலெடுத்து (இஸ்லாமியச் சேனைக்குத் தலைமை தாங்கி)க கொண்டுள்ளார். இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகுஇ ஜஅஃபர் அதை(த் தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டு)க் கொண்டுள்ளார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகுஇ அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டு)ள்ளார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகுஇ காலித் இப்னு வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைக் கையிலெடுத்துள்ளார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது. (வீர மரணத்தினால் அவர்கள் பெற்ற பெரும் பேற்றினை நாம் அறிந்த பிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது...” 
...அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்)இ ”அல்லதுஇ ”அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது” என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறுகிறார். 
இதைக் கூறியபோது நபி(ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்

கேள்வி8⃣
➡ எந்த மூன்று(செயலுடைய) நபர்களின் மீது மறுமையில் வழக்குரைப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...?(
(*இரண்டு சொன்னால் போதும்)

விடை: 
2270. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்திஇ அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!” என்று அல்லாஹ் கூறினான்.” 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 37. வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்
கேள்வி9⃣
➡விடுபட்ட இரண்டு குறிப்புகளை நிரப்புக:
”a)**********************b)***************************c)மது அருந்தப் படுவதும்d) வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்” என்று 
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

விடை: 80. ”கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

கேள்வி1⃣0⃣
➡ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக

No comments:

Post a Comment