Thursday, 24 November 2016

இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில்

கேள்வி 1:
ஒருவருடைய அன்றாடப் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைவது எது?

பதில்:
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்“ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது“ என நபித் தோழர்கள் கூறினர். “இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 9.
528

கேள்வி 2:
“எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. என நபி (ஸல்)அவர்கள் கூறியன எவை?
தெரிந்த ஒன்றைக் கூறுங்கள்,

பதில்:2
. “எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

1:எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன்.
2 :பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது.

3: என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்!

4 :போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை.

5 : (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 7. தயம்மும்

கேள்வி 3:
எந்தப் பிரார்த்தனையின் போது நபி (ஸல்)அவர்கள் தம் கைகளை அதிகம் உயர்த்துவார்கள்?

பதில் :3
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவிற்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு அவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ”அவர்கள் ”தமது அக்குளின் வெண்மை” அல்லது ”அக்குள்களின் வெண்மை”  தென்படும் அளவிற்கு (உயர்த்தினார்கள்)” என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 9. :1631

கேள்வி 4:
ஓர் அடியார் தமக்குத் துன்பம் ஏற்படும் போது என்ன கூற வேண்டும்?

பதில் :4 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
”ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது ”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி... என்று) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. :1675

கேள்வி 5:
செயல்களில் சிறந்தது எது?

பதில் :5
“செயல்களில் சிறந்தது எது?“ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது“ என்றார்கள். “அதற்குப் பிறகு எது (சிறந்தது)?“ எனக் கேட்கப்பட்டபோது, “இறைவழியில் போர்புரிதல்“ என்றார்கள். “அதற்குப் பிறகு எது (சிறந்தது?)“ எனக் கேட்கப்பட்டபோது “பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்“ என்று பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 25.:1519

கேள்வி 6:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் எவ்வாறு காட்சியளிப்பார்கள் ?

பதில் :6
“சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. :3327

கேள்வி 7:
இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

பதில் 7
 “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும். ஷஹீஹ் புகாரி 3329

கேள்வி 8:
மக்களிடையே எதற்காகப் பொய் சொல்பவன் பொய்யனாகக் கருப்பட மாட்டான்

பதில்:8
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 53
2692

கேள்வி 9:
நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?

பதில் 9
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்
நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, “நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?“ என்று அவர்களிடம் வினவப்பட்டது. “பத்தொன்பது“ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64
3949

கேள்வி 10
கடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில்அமராமல் மறதியால் எழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:
அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 22.
1224

Farhana fathima

No comments:

Post a Comment