Tuesday, 24 January 2017
இஸ்லாமிய கேள்வி பதில்
23:1:2017
கேள்வி :{1}
பத்ருப் போர் களத்தில் நபிகள் நாயகம்( ஸல்) அல்லாஹ் விடம் எவ்வாறு பிரார்த்தனை செய்தார் கள்?
பதில் :{1}
முஸ்லிம் 3621
( அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) ”கிப்லா”வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
👉”இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். 👈
எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு,பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, ”அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.)
கேள்வி :{2}
நபிகள் நாயகம் { ஸல்} அவர்கள் பத்ருப் போருக்கு முந்தைய நாளிலேயே இன்ன இடத்தில் இன்ன மனிதர் மாண்டுள்ளார் என்று சொன்னது உண்மை யா?
பதில் :{2}
உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள். பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். ”அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்” என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்
(முஸ்லிம்:5511)
கேள்வி :{3}
பத்ருப் போரில் எத்தனை யாவது வானத்தில் இருந்து வானவர்கள் உதவி செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்?
பதில்:{3}
முஸ்லிம் :3621
இந்த ஹதீஸை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் ”ஹைஸூம்! முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார். உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”நீர் சொன்னது உண்மையே.
இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” என்று கூறினார்கள்.
கேள்வி :{4}
அல்லாஹ் வானவர்களுக்கு எவ்வாறு வஹி அறிவித்தான்?
பதில் :{4}
"நான் உங்களுடன் இருக்கிறேன் நம்பிக்கை கொண்டோரை பலப்படுத்துங்கள் ! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்து களுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! " என்று அல்லாஹ் வானவர்களுக்கு வஹி அறிவித்தான். (Qur'an 8:12)
கேள்வி:{5}
பத்ருப் போர்களத்தில் ஜிப்ரீல் அலை அவர்களை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எவ்வாறு கண்டார்கள்?
பதில்:{5}
புகாரி : 3995.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
கேள்வி :{6}
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களுமு பத்ருப் போரில் கலந்து கொண்டதைப் பற்றி எவ்வாறு பேசிக் கொண்டார்கள்?
பதில் :{6}
(புகாரி:3992)
நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல்(அலை) அவர்கள், “இவ்வ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment