Saturday, 18 March 2017


இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி தொகுப்பு எண்:-115 

கேள்வி  (1)

உலகின் முதல் நபியார்?

 இறுதிநபியார்?

பதில்  (1)

உலகின் முதல் நபியார்?
ஆதம் நபி(அலை)
(19:58;20:122)

 இறுதிநபியார்?
  முஹம்மது நபி ஸல்      (33:40)



கேள்வி  (2)

பொறுமையில் சிறந்த நபி யார்?

பதில் (2)

அய்யூப் நபி(21:83;84)

கேள்வி  (3)

அழகில் சிறந்த நபி யார்?

கனவு களுக்கு விளக்கம் கூறிய நபி யார்?

சிறைச்சாலை சென்ற நபி யார்?

பதில்  (3)

யூசுப் நபி

   Qur'an:(12:31;21)
(12:32;35;42)

கேள்வி  (4)

அரசியல் வாழ்வில் தலை சிறந்த நபி யார்?

பதில்  (4)

சுலைமான் நபி

Qur'an:38:35

கேள்வி  (5)

சிறந்த குரல் வளம் பெற்ற நபி யார்?

பதில்  (5)

தாவூத் நபி அலை

Qur'an:34:10

கேள்வி  (6)

கவலைகள் அதிகம் கொண்ட  நபி யார்?
பதில்  (6)

யாகூப் நபி அலை

கேள்வி  (7)

இரக்கம் அதிகம் உள்ள நபி யார்?

பதில்  (7)

யஹ்யா நபி அலை

Qur'an:19:13

கேள்வி  (8)

கோபம் மிக்க நபி யார்?

பதில்  (8)

மூஸா நபி அலை

7:150;154

கேள்வி  (9)

இந்த நபி தந்தையின்றி பிறந்தார்?

பதில்  (9)

ஈசா நபி

Qur'an:3:47-59;  19:17-21

கேள்வி  (10)

தள்ளாத வயதிலும் இஸ்மாயில் இஸ்ஹாக் நபியைப் பெற்றார்?

பதில்  (10)

இபுராகிம் நபி

Qur'an:14:39

Monday, 6 March 2017


வினா விடை  தொகுப்பு 

#கேள்வி#1

அல்லாஹ் விற்கு உதாரணம் உள்ளதா?

 #பதில்#1

16:74
16:74 فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ‌ؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏ 
16:74. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

#கேள்வி#2

அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்? யார் அவர்கள்?

#பதில்#2

16:75
16:75 ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًا‌ؕ هَلْ يَسْتَوٗنَ‌ؕ اَ لْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏ 
16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.

#கேள்வி#3

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்:

#பதில்#3

16:76
16:76 وَضَرَبَ اللّٰهُ مَثَلاً رَّجُلَيْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰٮهُۙ اَيْنَمَا يُوَجِّههُّ لَا يَاْتِ بِخَيْرٍ‌ؕ هَلْ يَسْتَوِىْ هُوَۙ وَمَنْ يَّاْمُرُ بِالْعَدْلِ‌ۙ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ 
16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?  

#கேள்வி#4

காபிர்களுக்கு உதாரணம் என்ன?
#பதில்#4

#கானல்நீர்

24:39
24:39 وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏ 
24:39. அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.

#கேள்வி#5

தமது வசனங்களை அலட்சியம் செய்தவர்கள் எதற்கு உதாரணம்?

 #பதில்#5

#கால்நடைகள்

7:179
7:179 وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ ‌ۖ  لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا  وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا  وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ‌ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ‏ 
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.

 #கேள்வி#6

காபிர்களுக்கு மற்றும் ஒரு உதாரணம் என்ன? 

#பதில்#6

#ஆழ்கடலில் ஏற்படும் இருள்

24:40
24:40 اَوْ كَظُلُمٰتٍ فِىْ بَحْرٍ لُّـجّـِىٍّ يَّغْشٰٮهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ‌ؕ ظُلُمٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍؕ اِذَاۤ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰٮهَا‌ؕ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ‏ 
24:40. அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிற

Wednesday, 1 March 2017


வினா விடை கேள்வி  பதில் தொகுப்பு 

கேள்வி:1

இஸ்லாத்தில் சிறந்தது எது?

பதில்:1

11. “இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?“ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு “எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

12. “ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் “இஸ்லாத்தில் சிறந்தது எது“ எனக் கேட்டதற்கு, “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்“ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

கேள்வி:2

உண்மையான இறைநம்பிக்கையாளரின் குணம் எப்படி இருக்கும்?

பதில்:2

15. “உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

 கேள்வி:3

 ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவரின் ஏதாவது ஒரு தன்மையை குறிப்பிடுக?

பதில்:3

16. “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

கேள்வி:4 

“ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம்? நயவஞ்சகத்தின் அடையாளம் எது?
பதில்:4

17. “ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

கேள்வி:5

 எது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

பதில்:5

வெட்கம்

24. “அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, “அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

கேள்வி:6

 “செயல்களில் சிறந்தது எது?“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  கூறினார்கள்? 

பதில்:6

26. “செயல்களில் சிறந்தது எது?“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது“ என்றார்கள். “பின்னர் எது?“ என வினவப்பட்டதற்கு, “இறைவழியில் போரிடுதல்“ என்றார்கள். “பின்னர் எது?“ என்று கேட்கப்பட்டதற்கு, “அங்கீகரிக்கப்படும் ஹஜ்“ என்றார்கள்“ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

கேள்வி:7

 “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?“என்று முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்? 
பதில்:7

28. “ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?“ என்று கேட்டார். “நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

கேள்வி:8

“நயவஞ்சகனின் அறிகுறிகள் எத்தனை ஏதாவது ஒன்று கூறுக?

பதில்:8

33. “நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை

கேள்வி:9

வடிகட்டிய முனாபிக்கின் பண்புகள் எவை ஏதாவது ஒன்று கூறுக? 
பதில்:9

34. “நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; 

Friday, 17 February 2017



வினா விடை கேள்வி பதில் தொகுப்பு:- (13:2:2017)

கேள்வி 1

யாரை உற்ற நண்பனாக ஆக்க வேண்டாம்?

பதில் 1

)
4:119   وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ‌ؕ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ؕ‏ 
4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

கேள்வி 2

ஷைத்தான் எதைக்கொண்டு உங்களை பயமுறுத்துகிறான்?
 பதில் 2

2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) பயமுறுத்துகிறான்

கேள்வி 3
ஷைத்தான் எதை ஏவுகிறான்?
பதில் 3

ஒழுக்கம் இல்லாத செயலை செய்யும் மாறு ஏவுகிறான்

2:268   اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ  ۙۖ‏ 
2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

கேள்வி 4
ஷைத்தானின் கூட்டாளி யார்?
பதில் 4
4:38   وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنًا‏ 
4:38. இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)

கேள்வி 5
ஷைத்தான் எதை வாக்களிக்கிறான்?
பதில் 5
4:120   يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ‌ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْـطٰنُ اِلَّا غُرُوْرًا‏ 
4:120. ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

கேள்வி 6
ஷைத்தான் யாருக்கு பாதுகாவலராக இருக்கிறான்?
பதில் 6
2:257   اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ  وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.

கேள்வி 7
ஷைத்தான் எதை விரும்புகிறான்?
பதில் 7

5:91   اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏ 
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா

கேள்வி 8
ஷைத்தான் மனிதர்களை எவ்வாறு மயக்குகிறான்?
பதில் 8
6:113   وَلِتَصْغٰٓى اِلَيْهِ اَفْـِٕدَةُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ‏ 
6:113. (ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு 

Tuesday, 24 January 2017


இஸ்லாமிய கேள்வி பதில் 

23:1:2017

கேள்வி :{1}

பத்ருப் போர் களத்தில் நபிகள் நாயகம்( ஸல்) அல்லாஹ் விடம் எவ்வாறு பிரார்த்தனை செய்தார் கள்? 
பதில்  :{1}

முஸ்லிம் 3621

( அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) ”கிப்லா”வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.

 👉”இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். 👈

எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு,பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, ”அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.) 

கேள்வி :{2}

நபிகள் நாயகம் { ஸல்} அவர்கள் பத்ருப் போருக்கு முந்தைய நாளிலேயே இன்ன இடத்தில் இன்ன மனிதர் மாண்டுள்ளார் என்று சொன்னது உண்மை யா?

பதில் :{2}


உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள். பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். ”அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்” என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்
(முஸ்லிம்:5511)

கேள்வி :{3}

பத்ருப் போரில்  எத்தனை யாவது வானத்தில் இருந்து வானவர்கள் உதவி செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்?
பதில்:{3}

 முஸ்லிம் :3621

 இந்த ஹதீஸை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் ”ஹைஸூம்! முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார். உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”நீர் சொன்னது உண்மையே. 

இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” என்று கூறினார்கள்.

கேள்வி :{4}

அல்லாஹ் வானவர்களுக்கு எவ்வாறு வஹி அறிவித்தான்?

பதில் :{4}

"நான் உங்களுடன் இருக்கிறேன் நம்பிக்கை கொண்டோரை பலப்படுத்துங்கள் ! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்து களுக்கு மேலே வெட்டுங்கள்!  அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! " என்று அல்லாஹ் வானவர்களுக்கு வஹி அறிவித்தான். (Qur'an 8:12)

கேள்வி:{5}

பத்ருப் போர்களத்தில் ஜிப்ரீல் அலை அவர்களை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எவ்வாறு கண்டார்கள்?

    பதில்:{5}  

புகாரி :   3995. 
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

கேள்வி :{6}

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களுமு பத்ருப் போரில் கலந்து கொண்டதைப் பற்றி எவ்வாறு பேசிக் கொண்டார்கள்?
பதில் :{6}

(புகாரி:3992) 

நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல்(அலை) அவர்கள், “இவ்வ

Monday, 16 January 2017


வினா விடை தொகுப்பு:-

Question=1

அல்லாஹ் வின் திருநாமங்களை தவறாக பயன்படுத்துபவர்களை நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer =1

7:180
7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
7:180. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்

Question=2

சூரத்துல் பாத்திஹா
தோற்றுவாய் பொருள் கூறும்?
Answer=2

அல் பாத்திஹா – தோற்றுவாய்
பொருள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1.எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்து) பராமரிப்பவன்.
2.அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
3.தீர்ப்பு நாளின் அதிபதி.
4.(எனவே) உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
5.எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
6,7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள். மற்றும் பாதை மாறிச்  செல்லாதவர்கள்.

Question=3

காலிக் பொருள் கூறும்
Answer=3

படைத்தவன்  (6:102)

Question=4

கபீர் பொருள் என்ன?
Answer=4

ஃகபீர்- நன்கறிந்தவன்

Qur'an:2:234

Question=5

ரவூஃப் பொருள் யாது?
Answer=5

ரவூஃப்- இரக்கமுடையவன்

Qur'an:2:143

கேள்வி=6

ரஸ்ஸாக் பொருள் கூறும்?
பதில்=6

ரஸ்ஸாக்-உணவளிப்பவன்

Qur'an:5:114
கேள்வி:7

ரகீப் பொருள் கூறும்
பதில்=7

ரகீப்-கண்காணிப்பவன்

Qur'an:5:117

கேள்வி:=8

ஸமீவு பொருள் என்ன?
பதில்=8

ஸமீவு-செவியுறுபவன்

Qur'an:2:127

கேள்வி=9

ஷாக்கீர்-ஷக்கூர் பொருள் கூறும்
பதில்:=9

ஷாக்கீர்-ஷக்கூர்- நன்றி பாராட்டுபவன்

கேள்வி:=10

வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் பொருள் கூறும்?
பதில்=10

37:182   وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‌‏ 
37:182. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).




Saturday, 31 December 2016


இஸ்லாமிய வினா விடை 


கேள்வி--»❓1

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? 

பதில்--»✔ 1
#தொழுகையை_விடுவது 

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு,

 (நூல்: முஸ்லிம் 116)

கேள்வி--»❓2

யாருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை?

பதில் =>2

#அல்லாஹ்வை_நம்பிக்கை_கொண்டோருக்கு 

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.  
(அல்குர்ஆன் 4:103)

கேள்வி--»❓3
தொழுகை இதில் இருந்து நம்மை தடுக்கும்?

பதில்=>✔ 3

#வெட்கக்கேடான_காரியங்களை_விட்டும்_தீமையை_விட்டும்

(முஹம்மதே!) வேதத்தி­ருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)


கேள்வி=>❓4

யாருக்கு தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்=>✔ 4
#சூரத்துல்_ஃபாத்திஹா_ஓதாதவருக்கு


''சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபாதா (ர­லி)
 (நூல் : புகாரீ 756)

கேள்வி=>❓5

யாருக்கு தொழுகை செல்லாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்=>✔ 5
#ருகூ_சஜ்தாஹ்வை_பேணாதவர்கள் 

ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி­
(நூல் : திர்மிதீ 245)

கேள்வி=>❓6
திருடர்களில் மிகவும் மோசமான திருடன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்=>✔ 6

#தொழுகையில்_திருடுபவன்

''திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ''அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். ''தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.  அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி­) 
(நூல்: அஹ்மத் 11106)

கேள்வி=>❓7

ருகூவில் இருந்து எழுந்துவிட்டு சஜ்தாஹ் செய்யும் முறை எவ்வாறு இருக்கவேண்டும்?

பதில்=>✔ 7
#ஒட்டகம்_அமர்வது_போல்_அமர_வேண்டாம்

''உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­), (நூல்: நஸயீ 1079)

கேள்வி=>❓8

தொழுகையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியான இடம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்=>✔ 8

#ஸஜ்தாவில்

ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­)
(நூல் : முஸ்லி­ம் 824)

கேள்வி=>❓9

ஸகர் என்ற நரகம் யாருக்காக அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கிறான்?

பதில்=>✔ 9
#தொழுகையாளிகளாக_இல்லாதவருக்கு


"குற்றவாளிகளிடம் உங்களை ("ஸகர்" எனும்) நரகில் நுழைவித்தது எது? எனக் கேட்பார்கள்." "அதற்கவர்கள் நாம் தொழுகையாளிகளில் இருக்க வில்லை", "மேலும் "ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்க வில்லை, எனக் கூறுவார்கள்." "இன்னும் நாம் (வீணானவற்றில்) மூழ்கியிருந்தோருடன் மூழ்கி இருந்தோம்".
 (அல்குர்ஆன் 74: 41, 42, 43, 44,45) 

கேள்வி=>❓10

சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?

பதில்=>✔ 10
#சரியாக_தொழுகையை_பேணுபவர்கள் 

அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.இத்தகையோர் தாம் சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்

(அல் குர்ஆன் 23:9,10)

🍇Rosana binth abbas🍇