Saturday, 24 December 2016
106வது கேள்வி பதில் தொகுப்பு
கேள்வி, 1
நபி ஸல் அவர்களின் தந்தையின் பெயர் என்ன ?
சரியான பதில் :-
அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் ( #தபரீ, #இப்னு_ஹிஷாம் )
கேள்வி, 2
* இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது ?
* சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது ?
* குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால் ? அது சாயலில் தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால் ?
ஆகிய இந்த மூன்று கேள்விகளையும் நபி ஸல் அவர்களிடம் கேட்டு அதற்கு விடை பெற்ற பின்னே இவர் இஸ்லாத்தை ஏற்றார் . யார் இவர் ? பெயர் என்ன ?
சரியான பதில் :-
#அப்துல்லாஹ்_இப்னு_ஸலாம் ரழி ( #புகாரி .. )
கேள்வி, 3
" (அந்நயவஞ்சகர்களில் ) யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் , ( ஜனாஸா) தொழ வேண்டாம் " என்ற ( குர் ஆன் 9:84) வசனம் எந்த நயவஞ்சகனின் விடயத்தில் அருளப்பட்டது ?
சரியான பதில் :-
#அப்துல்லாஹ்_இப்னு_உபை ( #புகாரி )
கேள்வி, 4
நபி ஸல் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய தயாராகினார்கள்.. மதினாவரை தங்களுக்கு வழிகாட்டியாக நபி ஸல் யாரை தேர்ந்து எடுத்தார்கள். ?
சிறு குறிப்பு :- இவர் முஸ்லிமாக இருக்க வில்லை குறைஷிகளின் மதத்தைப் பின்பற்றியவராகவே இருந்தார் ..
சரியான பதில் :-
#அப்துல்லாஹ்_இப்னு_உரைக்கித்_லைஸி ( الرحيق المختوم )
கேள்வி, 5
நபி ஸல் அவர்கள் எந்த சஹாபிக்கு " நீர் தாவூத் அலை நோன்பு நோற்பிராக " என்று கூறினார்கள் ?
சரியான பதில் :-
#அப்துல்லாஹ்_இப்னு_அம்ர்_இப்னு_அல்_ஆஸ் ரழி ( #புகாரி )
கேள்வி, 6
நபி ஸல் காலத்தில் எந்த தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை ?
சரியான பதில்:-
* ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை
*நோன்பு பெருநாள் தொழுதை
*மழைத் தொழுகை
( புகாரி - 959,, 960,, 1022) ( முஸ்லிம் 1608)
கேள்வி, 7
பிறையைக் கண்டதாக எத்தனை முஸ்லிம் சாட்சி சொன்னால் அதை ஏற்று செயற்படுத்துங்கள் என்று நபி ஸல் கூறினார்கள் ?
சரியான பதில் :-
#இரண்டு ( நசயீ 2116,, அஹ்மத் 9556 )
கேள்வி, 8
யாருடைய கழுத்து கியாமத்து நாளில் நீண்டதாக இருக்கும் ?
சரியான பதில் :-
முஅத்தின் கியாமத் நாளில் யாவரையும் விட நீண்ட கழுத்து உடையவராக இருப்பார்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( #முஸ்லிம் )
கேள்வி, 9
மூன்று மனிதர்களுக்கு கியாமத் நாளின் கடும் திடுக்கத்தின் பயமோ, கேள்வி கணக்கோ கிடையாது. படைப்பினங்கள் யாவும் தமது கேள்வி கணக்குகளை முடித்துக் கொள்ளும் வரை அவர்கள் கஸ்தூரி மேடைகளின் மேல் உல்லாசமாகச் சுற்றித் திரிவார்கள். அந்த மூவர் யார் ?
சரியான பதில் :-
மூன்று மனிதர்களுக்கு கியாமத் நாளின் கடும் திடுக்கத்தின் பயமோ, கேள்வி கணக்கோ கிடையாது. படைப்பினங்கள் யாவும் தமது கேள்வி கணக்குகளை முடித்துக் கொள்ளும் வரை அவர்கள் கஸ்தூரி மேடைகளின் மேல் உல்லாசமாகச் சுற்றித் திரிவார்கள்.
அவர்கலில் 1.முதலாமவர், அல்லாஹ் வின் பொருத்தத்திற்காக குர்ஆன் ஓதி, அவருக்குப் பின் நின்று தொழுதவர்கள் அவர் மீது திருப்தியுற்ற நிலையில் தொழவைத்த இமாம்.
2. இரண்டாமவர், அல்லாஹ் வின் பொருத்தத்திற்காக மக்களைத் தொழுகைக்கு அழைத்தவர்.
3. மூன்றாமவர், தன் இரட்சகனின் கடமைகளையும் நல்ல முறையில் ஆற்றி-தன் எஜமானின் கடமைகளையும் நன்முறையில் நிறைவேற்றிய அடிமை''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( #திர்மிதீ )
கேள்வி, 10
ஈஸா அலை அவர்கள் மக்களை நோக்கி எந்த இரு வார்த்தைகளை தவிர வேறு எதையும் கூறவில்லை ?
சரியான பதில் :-
என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை .. ( 5:117 )
படிக்க வேண்டிய வசனம் ( அல்மாயிதா 111-120)
💝 الحمد لله كثيرا 💝
جزء ك الله خيرا...
👐 رب زدني علما 🙌🏻
Subscribe to:
Post Comments (Atom)
இப்ராஹிம் நபியின் சமுதாயம் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்
ReplyDeleteஉலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பிய நபி யார்
ReplyDeleteநபி முஹம்மது ஸல் அவர்கள்
Deleteமுஹம்மது ஸல் அவர்கள்
Deleteநோன்பின் நோக்கம் பற்றி அல்குர்ஆனில் எந்த சூரா பேசுகிறது?
ReplyDeleteசூரத்துல் பகரா
Deleteஅல்லாஹ்வின் 27 பண்புகளை பற்றி குறிப்பிடும் சூரா
ReplyDelete