பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்
94வது வினா விடை கேள்வி பதில் தொகுப்பு
1)👉🏿✍🏻 question ✍🏻👇🏻
உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் என யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
1)👉🏿✍🏻 Answer ✍🏻👇🏻🔏
‘உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் யார் எனில், யார் குர்ஆனைக் கற்று, (பிறருக்கும்) கற்றுத் தருகிறார்களோ அவர்கள்’ (அறிவிப்பவர் : உதுமான் (ரலி), நூல்: புகாரி
🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
2)👉�✍🏻 question ✍🏻👇🏻
குழந்தைகளின் எத்தனை வயதில் அவர்களை தொழுகைக்கு ஏவுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்¿?
2)👉🏿✍🏻 answer ✍🏻👇
உங்களின் குழந்தைகளுக்கு எழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்கள்: அவர்கள் பத்து வயது ஆகும் போது (தொழ மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
3)👉🏿✍🏻 question ✍🏻👇🔐
ஆயிஷா (ரலி) அவாகள் மீது கூறப்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய குர்ஆன் வசனம் எது?
3)👉🏿✍🏻 Åñßwår ✍🏻👇🔏
{24:11 , 24:23}
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்-குர்ஆன் 24:11)
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
4)👉🏿✍🏻 question ✍🏻👇🔐
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்?
4)👉🏿✍🏻 answer ✍🏻👇🔏
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல்
புகாரி 2661
❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇❇
5)👉🏿✍🏻 question ✍🏻👇🔐
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைக் கூறுக.
5)👉🏿✍🏻 Answer ✍🏻👇🏻🔏
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து ஒன்று தான்.
அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்
அல்லாஹ் நபி (ஸல்) அவாகள் மீது ஸலவாத் கூறுமாறு திருக்குர்ஆனில் வசனம் 33:56 ல் கட்டளையிட்ட போது, நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
6)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்?
6)👉🏿✍🏻 answer ✍🏻👇🏻🔏
1) நீதமான ஆடசியாளர்
2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன்
3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர்
4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர்
5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்
6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய்தவர்
7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
7)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?
7)👉🏿✍🏻 Answer ✍🏻👇🏻🔏
1) வாழ்நாளை எப்படி கழித்தான்
2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்
3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்
4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்
5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)
☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢
8)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
‘அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்?
8)👉🏿✍🏻 answer ✍🏻👇🏻🔏
(1) அபூபக்கர் (ரலி)
(2) உமர் (ரலி)
(3) உதுமான் (ரலி)
(4) அலி (ரலி)
(5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)
(6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)
(7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
(8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி)
(9) ஸயித் இப்னு ஜைத் (ரலி)
(10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி)
(ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா)
☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣☣
9)👉🏿✍🏻 question ✍🏻👇🏻🔐
எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்
Ma shaa allah.. baarakallahu feek ...very useful for us
ReplyDelete